இந்தியா

மோடி ஆட்சியில் 2 பில்லியன் டாலர் இழப்பு.. இந்தியாவில் கடையை காலி செய்யும் ஃபோர்டு நிறுவனம்: என்ன காரணம்?

முன்னணி கார் நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

மோடி ஆட்சியில் 2 பில்லியன் டாலர் இழப்பு.. இந்தியாவில்  கடையை காலி செய்யும் ஃபோர்டு நிறுவனம்: என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா பாதிப்பு காரணமாக நாடுமுழுவதும் கடும் பொருளாதார சரிவை இந்தியா சந்தித்து வருகிறது. இதனிடையே மோடி ஆட்சியில், நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, GST வரி விதிப்பால் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதால் ஃபோர்டு, அசோக் லேலண்ட், மாருதி, மஹிந்திரா, BOSCH இந்தியா போன்ற பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் பெரும்பகுதி உற்பத்தியை நிறுத்தி வருகின்றன.

மேலும் பங்குச்சந்தையில் ஏற்படும் சரிவால், அந்நிய முதலீட்டாளர்கள் பல்வேறு துறையில் செய்த முதலீடுகளை திரும்பப் பெற்று வருகின்றனர். அதேவேளையில், இந்தியர்கள் பொருளாதார சரிவால் கார் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர்.

மோடி ஆட்சியில் 2 பில்லியன் டாலர் இழப்பு.. இந்தியாவில்  கடையை காலி செய்யும் ஃபோர்டு நிறுவனம்: என்ன காரணம்?

இந்நிலையில், முன்னணி கார் நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான தகவலில், பொருளாதார சரிவால் ஃபோர்டு கார் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஃபிகோ, ஃப்ரீஸ்டைல் மற்றும் அஸ்பையர் உள்ளிட்ட மாடல்களின் உற்பத்தியை மட்டும் குறைக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது 10% அளவில் தனது உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் நிறுத்தியுள்ளது. மேலும் 2022ஆம் ஆண்டோடு தமிழ்நாட்டில் செயல்படும் ஃபோர்டு கார் உற்பத்தி ஆலையை இந்தாண்டே மூடத் திட்டமிட்டுள்ளதாகவும், நிலுவையில் இருக்கும் வாகனங்களை மட்டும் சென்னை ஆலையில் பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஃபோர்டு நிறுவனத்திற்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விற்பனையும் பல மடங்கு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ஆலையை மூடுவதன் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories