இந்தியா

“இந்த பிரச்சனை இருந்தா உடனே கொரோனா டெஸ்ட் எடுங்க” - புதிய அறிகுறிகள் பற்றி எச்சரிக்கும் மருத்துவர்கள்!

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இல்லாமல் வேறு சில அறிகுறிகளுடனும் கொரோனா தொற்று ஏற்படலாம் என கோவிட் பணிக்குழுவை சேர்ந்த மருத்துவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

“இந்த பிரச்சனை இருந்தா உடனே கொரோனா டெஸ்ட் எடுங்க” - புதிய அறிகுறிகள் பற்றி எச்சரிக்கும் மருத்துவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் கடந்தாண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. பல மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்தாலும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகக் கடுமையான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய நிலையில் மூன்றாம் அலை விரைவில் தொடங்கும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இல்லாமல் வேறு சில அறிகுறிகளுடனும் கொரோனா தொற்று ஏற்படலாம் என கோவிட் பணிக்குழுவை சேர்ந்த மருத்துவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவின் பிரதான அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் இல்லாவிட்டாலும், காது கேளாமை, நீண்ட நேர தலைவலி, நா வறட்சி போன்றவை இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களுக்கு கோவிட் பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவிட் 19 பணிக்குழுவில் உள்ள டாக்டர் ராகுல் பண்டிட் கொரோனா வைரஸ் தாக்கியதற்கான புதிய அறிகுறிகள் பற்றி ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது, கொரோனாவின் பிரதான அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் இல்லாவிட்டாலும், காது கேளாமை, நீண்ட நேர தலைவலி, நா வறட்சி, மைப்படல அழற்சி, கண் எரிச்சல், கடுமையான களைப்பு, சருமக்கோளாறுகள் போன்றவை இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

கோவிட் பணிக்குழுத் தலைவர் டாக்டர் சஞ்சய் ஓக் கூறுகையில், கொரோனா இரண்டாம் அலையின்போது டெல்டா வேரியண்ட்டினால் நிறைய பேருக்கு உணவு-குடல் பாதையில் பிரச்சனைகள் ஏற்பட்டன. இதனால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, போன்ற அறிகுறிகள் தோன்றின எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories