இந்தியா

லாரியில் கட்டிவைத்து சாலையில் இழுத்து சென்ற கொடூரம் : பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் பழங்குடியினர் கொடூர கொலை!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாகனத்தில் கட்டிவைத்து சாலையில் இழுத்துச் சென்று கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாரியில் கட்டிவைத்து சாலையில் இழுத்து சென்ற கொடூரம் : பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் பழங்குடியினர் கொடூர கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலத்தில் அண்மையில் அடுத்தடுத்து இரண்டு இஸ்லாமிய வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது அடங்குவதற்குள் மற்றொரு இரக்கக் குணமற்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கன்ஹையாலால் பீல் என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.

இதில், வாகனத்தில் இருந்த பால் கேன் சாலையில் விழுந்து அதில் இருந்த பால் அனைத்தும் வீணாக கொட்டியது. இதனால் ஆவேசமடைந்த அந்த நபர் கன்ஹையாலாலை அடித்துள்ளார். மேலும் தனது நண்பர்களை அங்கு வரவழைத்து, அவரின் கை, காலை ஒன்றாகக் கட்டியுள்ளனர்.

பின்னர் அந்த கயிறை லாரியில் கட்டி வாகனத்தை ஓட்டிள்ளனர். இதில் அவர் சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டார். இதனால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் சில கிலோமீட்டர் இழுத்து சென்ற பிறகு அவரை சாலையின் ஓரேம் வீசிவிட்டுச் அந்த கும்பல் சென்றுவிட்டது.

இந்த கொடூர சம்பவத்தை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து போலிஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பிறகு, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்ஹையாலா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் மிகவும் மனிதாபிமானமற்ற செயல் என முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் விமர்சித்துள்ளார். மேலும் பா.ஜ.க அரசு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories