இந்தியா

பெட்ரோல், டீசல் விலைலாம் ஒரு உயர்வா? - பாஜக எம்.பி பிரக்யா தாகூர் பேச்சால் மக்கள் கொதிப்பு!

பெட்ரோல், டீசல் விலைலாம் ஒரு உயர்வா? - பாஜக எம்.பி பிரக்யா தாகூர் பேச்சால் மக்கள் கொதிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சர்ச்சை கருத்துகளை பேசுவதில் பிரபலமானவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜகவின் எம்.பி. பிரக்யா சிங் தாகூர். தற்போது பெட்ரோல், டீசல் உயர்வு குறித்து பிரக்யா சிங் தாகூர் பேசியுள்ளது மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரக்யா சிங், பெட்ரோல், டீசல் விலையெல்லாம் ஒரு உயர்வே இல்லை. இதெல்லாம் காங்கிரஸ்காரர்கள் செய்யும் பொய் பிரசாரம்.

கொரோனா ஊரடங்கின் போது மக்களை தேடி போய் சேவை செய்தது பாஜகவின் அதன் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான். இன்னமும் செய்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்த காங்கிரஸ்காரர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என்று மக்களுக்கு சேவையாற்ற முன்வரவே இல்லை. எனக் கூறியுள்ளார்.

முன்னதாக மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ₹110-ஐ தாண்டி விற்கப்படுகிறது. சில பகுதிகளில் ₹112.57க்கு விற்பனை ஆகிறது. அதேபோல ஒரு லிட்டர் டீசலும் ₹100க்கு மேல்தான் விற்கப்பட்டு வருகிறது.

இப்படியான சூழல் நிலவுகையில் அதெல்லாம் ஒரு விலை உயர்வே இல்லை என பிரக்யா சிங் கூறியிருப்பது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories