இந்தியா

ஆண் குழந்தைக்காக 8 முறை கருவை கலைக்கச் செய்த கொடூரம்.. இதைவிட மோசமான செயலை செய்த கணவன்!

ஆண் குழந்தைதான் வேண்டும் எனச் சொல்லி 8 முறை மனைவிக்கு கருக்கலைப்பு செய்ய வைத்த கொடூரம் மும்பையில் நடந்துள்ளது.

ஆண் குழந்தைக்காக 8 முறை கருவை கலைக்கச் செய்த கொடூரம்.. இதைவிட மோசமான செயலை செய்த கணவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையில் உள்ள தாதர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஒருவர். இவருக்கு கடந்த 2007ம் ஆண்டு திருமணம் ஆகியுள்ளது. மணமான இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கருவுற்றிருந்த அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

ஆனால் ஆண் குழந்தைதான் வேண்டும் என பெண்ணின் கணவரும் அவரது குடும்பத்தாரும் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார்கள். இதனையடுத்து 2011ம் ஆண்டில் மீண்டும் கருவுற்றிருந்த அந்த பெண்ணின் கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்றும் சட்டத்திற்கு விரோதமாக தெரிந்திருக்கிறார்.

கருவில் இருந்து பெண் என தெரிந்ததும் கட்டாய கருக்கலைப்பும் செய்ய வைத்திருக்கிறார் அந்த வழக்கறிஞர். இது போன்று 8 முறை கருக்கலைப்பு செய்ய வைத்திருக்கிறார். பின்னர் ஆண் குழந்தைதான் வேண்டும் என உறுதியாக இருந்ததோடு தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக்கிற்கு மனைவியை அழைத்துச் சென்று அங்கு சில நவீன சிகிச்சைகளையும் கொடுக்க வைத்திருக்கிறார்.

ஆண் குழந்தைக்காக 8 முறை கருவை கலைக்கச் செய்த கொடூரம்.. இதைவிட மோசமான செயலை செய்த கணவன்!

அந்த சிகிச்சையின் போது அப்பெண்ணுக்கு சுமார் 1500 ஸ்டீராய்ட் மற்றும் ஹார்மோன் சார்ந்த மருந்துகளும் ஊசிகளும் செலுத்தப்பட்டிருக்கிறதாம். இது போன்ற கொடுமைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் வெறுத்துப்போன அப்பெண் தந்தையின் உதவியுடன் காவல் நிலையத்தில் கணவர் மீதும் அவரது குடும்பத்தார் மீது புகாரளித்திருக்கிறார்.

முன்னதாக வழக்கறிஞரான அந்த நபரின் தாயாரும் ஒரு வழக்கறிஞராவார். மேலும் அவரது சகோதரி மருத்துவராகவும் உள்ளார். இவ்வாறு நன்று படிப்பறிவு பெற்றவர்களே இயற்கைக்கு மாறாக நடந்துக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற நிகழ்வுகளால் பெண் உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் போராடிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற சூழலே நிலவுகிறது என கருத்துகளும் தெரிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது.

banner

Related Stories

Related Stories