இந்தியா

“தாயின் பெயரையும் இனிஷியலாக பயன்படுத்த குழந்தைக்கு உரிமை உண்டு” : டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தாயின் பெயரை இனிஷியல் ஆகப் பயன்படுத்த குழந்தைக்கு உரிமை உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“தாயின் பெயரையும் இனிஷியலாக பயன்படுத்த குழந்தைக்கு உரிமை உண்டு” : டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தாயின் பெயரையும் இனிஷியல் ஆகப் பயன்படுத்த குழந்தைக்கு உரிமை இருக்கிறது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாயின் பெயரை இனிஷியலாக பயன்படுத்தினல் எதிர்காலத்தில் சிக்கல்கள் நேருமா என்பது தொடர்பான வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “என் கட்சிக்காரரின் மகள் மைனர். ஆனால், அவரது ஆவணங்களில் என் கட்சிக்காரரின் மனைவி பெயர் இனிஷியலாக மாற்றப்பட்டுள்ளது. இது, எதிர்காலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்ந்த விவகாரங்களில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா?” என சந்தேகம் எழுப்பினார்.

அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதி ரேகா பாலி, “ஒரு குழந்தை தன் விருப்பப்படி தந்தை அல்லது தாய் பெயரை இனிஷியலாக பயன்படுத்த உரிமை உள்ளது. தேவைப்படும் இடத்தில் குழந்தையின் பள்ளிச் சான்றிதழில் உள்ள தந்தை பெயரை காண்பித்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

மேலும், தாயின் பெயரை இனிஷியலாக போட்டுள்ளதால் எதிர்காலத்தில் சிக்கல் நேருமா என்ற சந்தேகத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

banner

Related Stories

Related Stories