இந்தியா

“மண்டியிடு.. மன்னிப்பு கேள்..” : அத்துமீறிய இளைஞரை விரட்டிச் சென்று வெளுத்து வாங்கிய இளம்பெண்!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞருக்கு பெண் பதிலடி கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

“மண்டியிடு.. மன்னிப்பு கேள்..” : அத்துமீறிய இளைஞரை விரட்டிச் சென்று வெளுத்து வாங்கிய இளம்பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில் இருக்கும் பெண்ணிடம் வழி கேட்பது போல அந்த இளைஞர் உடலைத் தொட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் அடிக்க முயன்றபோது, இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றுள்ளான். அவனை விரட்டிப் பிடித்த அந்தப் பெண் அவனது வாகனத்தை பிடித்து தள்ளிவிட்டதில், அவன் அருகில் இருந்த கால்வாயில் வாகனத்தோடு விழுந்துள்ளான். இதனையடுத்து இளைஞனை அந்தப் பெண் கேள்விகளால் வெளுந்து வாங்கினார்.

அப்போது அந்தப் பெண், “உனக்கு எவ்வளவு தைரியம்? என்னிடம் மன்னிப்புக் கேள். இங்கே மண்டியிடு” என அந்த இளைஞரை விளாசியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அந்த இளைஞரை கைது செய்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞருக்கு பெண் பாடம் புகட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்தப் பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories