இந்தியா

“கங்கையில் குவிந்த மக்கள்... கொரோனா பரவும் அபாயம்” : பட்டும் பாடம் கற்காத யோகி ஆதித்யநாத் அரசு!

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் சமூக இடைவெளியின்றி பக்தர்கள் குவிந்ததால் கொரோனா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது.

“கங்கையில் குவிந்த மக்கள்... கொரோனா பரவும் அபாயம்” : பட்டும் பாடம் கற்காத யோகி ஆதித்யநாத்  அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் குறைந்துவந்த கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ள நிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பக்தர்கள் குவிந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சம் என்ற அளவில் உச்சம் தொட்டது. பின்னர் மாநிலங்களில் தீவிர கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுவந்ததை அடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது.

குறைந்துவந்த கொரோனா எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் மாதத்தில் வரும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது கொரோனா அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் குவிந்தனர். அதேபோல் கங்கை நதியிலும் பக்தர்கள் குவிந்து கூட்டமாக நீராடினர். இதனால் அப்பகுதியில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை உச்சத்திலிருந்தபோது உத்தர பிரதேச மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா அதிகரித்து வரும் வேலையில், கட்டுப்பாடுகளை விதிக்காமல் பக்தர்களை அனுமதித்து கொரோனா பரவும் அபாயத்தை முதல்வர் ஆதித்யநாத் ஏற்படுத்தியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories