இந்தியா

'தலைமுடியைக் கிண்டல் செய்ததால் ஆத்திரம்'... பீர் பாட்டிலால் மண்டை உடைப்பு- ஒருவர் கொலை: 5 பேர் கைது!

தலைமுடியைக் கிண்டல் செய்ததால் பீர் பாட்டிலால் மண்டையை உடைத்து கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'தலைமுடியைக் கிண்டல் செய்ததால் ஆத்திரம்'... பீர் பாட்டிலால் மண்டை உடைப்பு- ஒருவர் கொலை: 5 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திர மாநிலம் பெடமாண்டி போலவரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாபாபு. இவரது நண்பர் காசிசீனு. இவர்கள் இருவரும் கடந்த வெள்ளியன்று ஏனாம் புறவழிச்சாலையில் மதுபானம் குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களுக்குப் பக்கத்திலேயே ஐந்து பேர் கும்பலாக மது குடித்துக் கொண்டிருந்தனர். இந்த கும்பலில் இருந்த வாலிபர் ஒருவரின் முடியைப் பார்த்து ராஜாபாபு கிண்டல் செய்துள்ளார்.

இதனால் இரு தரப்பிற்கும் இடையே தரகாறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு அடிதடியாக மாறியதைத் தொடர்ந்து, கையிலிருந்து மது பாட்டில்களால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இதில் ராஜாபாபு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் ராஜாபாபு உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் காயமடைந்த மற்றவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராஜமுந்திரியைச் சேர்ந்த சத்தியநாராயணன், தமேன்னா சுப்பாராவ், கேத்கிரி மணிகண்டன், பெத்துரெட்டி ரோகித் மற்றும் 17 சிறுவன் என தெரியவந்து.

இதையடுத்து போலிஸார் நான்குபேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை மட்டும் கூர்நோக்கு இல்லத்தில் போலிஸார் சேர்த்தனர்.

banner

Related Stories

Related Stories