இந்தியா

கணவரை விடுவிக்க லஞ்சம் கேட்டதால் வாக்குவாதம்; ஆத்திரத்தில் பெண்ணின் மீது அமர்ந்து தாக்கிய உ.பி. போலிஸ்!

உத்தரப் பிரதேசத்தில் பெண் ஒருவர் மீது உட்கார்ந்து போலிஸார் தாக்கும் நடத்தும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

கணவரை விடுவிக்க லஞ்சம் கேட்டதால் வாக்குவாதம்; ஆத்திரத்தில் பெண்ணின் மீது அமர்ந்து தாக்கிய உ.பி. போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் துர்காதாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவம் யாதவ். இவர் நண்பர்களுடன் சேர்ந்து கிராமத்தில் சூதாடுவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் மகேந்திர படல் தலைமையில் போலிஸார் துர்காதாஸ்பூர் கிராமத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது சிவம் யாதவின் மனைவி ஆர்த்தி மற்றும் உறவினர்கள் போலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, ஆர்த்தியின் மீது மகேந்திர படேல் அமர்ந்து தாக்குதலில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் சனிக்கிழமையன்று நடைபெற்றது என்றும், கணவரைத் தப்பிக்கச் செய்யவே அவரின் மனைவி போலிஸாரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது உதவி ஆய்வாளர் மகேந்திர படல் அந்த பெண் மீது விழுந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், மகேந்திர படேல் தன்னை அடித்து தரையில் இழுத்து தன் மீது ஏறி உட்கார்ந்து தாக்குதல் நடத்தியாக ஆர்த்தி தெரிவித்துள்ளார். அதேபோல் சிவமை விடுதலை செய்ய மகேந்திர படல் லஞ்சம் கேட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories