இந்தியா

”UPSCல் சாதிய பாகுபாடு தொடர்ந்தால் இந்தியா ஒரு போதும் முன்னேறாது” - டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் கருத்து

சாதிய பாகுபாடுகள் குறித்து யுபிஎஸ்சி தலைவருக்கு டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் கடிதம் எழுதியுள்ளார்.

”UPSCல் சாதிய பாகுபாடு தொடர்ந்தால் இந்தியா ஒரு போதும் முன்னேறாது” - டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் கருத்து
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு அமைந்த நாள் முதலே சமூக நீதியை காக்கும் இடஒதுக்கீட்டை ஒழித்து சனாதனத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

அதிலும் குறிப்பாக கல்வியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நீக்கும் வகையில் பல்வேறு சதிகளை கையாண்டு வருவது வழக்கமாகியுள்ளன.

அதன்படி அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போதும், முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் போதும் பல நிலைகளில் சாதிய பாகுபாடுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக உரிய தகுதி பெற்றிருப்போருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டும், பறிக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய அரசு பணியிடங்களுக்கான நேர்காணலில் சாதி ரீதியில் பாகுபாடுகள் நிலவுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக UPSC தலைவர் பிரதீப் குமார் ஜோஷிக்கு டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

அதில், நேர்காணலின் போது தேர்வாளர்களுக்கு விண்ணப்பதாரர்களின் சாதியை தெரியபடுத்த வேண்டாம் என்றும், பொதுப் பிரிவினருக்கும் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும் தனித்தனியாக நேர்காணலை நடத்துவதற்கு பதில் அனைவருக்கும் ஒன்றாகவே நேர்காணல் நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், UPSC அல்லது வேறு எந்த நேர்காணலிலும் சாதியை காரணமாக கொண்டு பாகுபாடுகள் நிகழ்ந்தால் இந்தியா ஒருபோதும் முன்னேற்றத்தையே காணாது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories