இந்தியா

வேட்புமனு தாக்கல் செய்யவந்த பெண்ணின் சேலையை இழுத்து அட்டூழியம் செய்த பாஜக தொண்டர்கள்:யோகி அரசின் அராஜகம்!

உத்தர பிரதேசத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பெண்ணின் சேலையை இழுத்து பா.ஜ.க தொண்டர்கள் அட்டூழியம் செய்யும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யவந்த பெண்ணின் சேலையை இழுத்து அட்டூழியம் செய்த பாஜக தொண்டர்கள்:யோகி அரசின் அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 826 இடங்களுக்கான பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்கள் நேரடியாக வாக்களிக்க முடியாது. ஆனால் கவுன்சில் உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். அடுத்த ஆண்டு இம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் உள்ளாட்சித் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூலை 8ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பா.ஜ.க கட்சி தொண்டர்கள் பல்வேறு இடங்களில் வேண்டுமென்றே கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் மீதும், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், லக்னோ அருகே லக்கிம்பூர் பகுதியில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணை மனு தாக்கல் செய்ய விடாமல் பா.ஜ.க தொண்டர்கள் பெண்ணின் சேலையைப் பிடித்து இழுத்து அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து பெண்ணின் சேலையை பிடித்து இழுக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், 'அதிகாரப்பசி, யோகி ஆதித்யநாத்தின் குண்டர்கள்' எனப் பதிவிட்டு, அந்த வீடியோவையும் இணைத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல், சீதாபூர்,எட்டாவா, பண்டா,ஃபரூகாபாத், ஜலான், உன்னாவ் என பல மாவட்டங்களில் பா.ஜ.க தொண்டர்கள் திட்டமிட்டு கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சராக இருக்கும் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்துள்ளதால், அடுத்த வருடம் நடைபெறும் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் பஞ்சாயத்து தேர்தலின்போது கலவரத்தில் ஈடுபடுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories