இந்தியா

முதல் ஊசியில்லா தடுப்பு மருந்து... 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிக்கு அனுமதி கோரிய ஜைடஸ் கெடிலா!

ஜைடஸ் கெடிலா நிறுவனம், 12 - 18 வயதுடையவர்களுக்கு செலுத்தக்கூடிய ஜைகோவ்-டி தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

முதல் ஊசியில்லா தடுப்பு மருந்து... 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிக்கு அனுமதி கோரிய ஜைடஸ் கெடிலா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதால் கொரோனா பாதிப்பு குறைந்து, உயிரிழப்பும் குறைந்து வருகிறது.

ஆனாலும், ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கையால் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி பற்றாகக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக கொரோனா 3-வது அலையைத் தவிர்ப்பது கடினம் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில் ஜைடஸ் கெடிலா நிறுவனம், தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

ஜைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்துள்ள ஜைகோவ்-டி தடுப்பு மருந்து 12 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு பாதுகாப்பானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களால் ஆண்டுக்கு 10 முதல் 12 கோடி தடுப்பு மருந்துகளை தயாரிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த ஜைடஸ் கெடிலா மருந்து நிறுவனம், 12 - 18 வயதுடையவர்களுக்கு செலுத்தக்கூடிய ஜைகோவ்-டி (ZyCoV-D) என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட கிளினிக்கல் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், அவசரப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கக் கோரி, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிஜிசிஐ) அனுமதி கோரியுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு எதிரான 4 தடுப்பூசிகளுக்கு, ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது. கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக்-வி, மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. ஜைடஸ் கெடிலா தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் இந்தியாவில் 5வது தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.

ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி 3 டோஸ்களைக் கொண்டது. முதல் டோஸ் எடுத்துக்கொண்டபின் 28வது நாளில் 2வது டோஸும், 56வது நாளில் 3வது டோஸும் செலுத்த வேண்டும்.

ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் இது செலுத்தப்படும்.

இந்த தடுப்பூசி, ஒன்றிய அரசின் உயிர் தொழில்நுட்பத் துறையின் கீழ் வரும், உயிர்தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவிக் குழுவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories