இந்தியா

2019-2020ஆம் நிதி ஆண்டில் பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக குவிந்த ரூ.785 கோடி... தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம்!

கடந்த நிதி ஆண்டில் பா.ஜ.க ரூ. 785 கோடி நன்கொடை பெற்றிருப்பது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

2019-2020ஆம் நிதி ஆண்டில் பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக குவிந்த ரூ.785 கோடி... தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தொடர்ந்து 7வது ஆண்டாக, நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து நன்கொடை அதிகம் பெற்ற கட்சியாக பா.ஜ.க முதலிடத்தில் உள்ளது.

நிறுவனங்கள், தனிநபர்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது வழக்கம். அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் பெற்ற ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த வகையில் 2019-2020ஆம் நிதியாண்டில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களுக்கு அளித்த நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்துள்ளன.

அதன்படி, தொடர்ந்து 7வது ஆண்டாக 2019-20ம் நிதியாண்டில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து நன்கொடை அதிகம் பெற்ற கட்சியாக பா.ஜ.க உள்ளது.

இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்துள்ள பா.ஜ.க, 2019-20 நிதி ஆண்டில் ரூ.785 கோடி நன்கொடையாகப் பெற்றிருப்பதாகக் கூறியுள்ளது. இதன் மூலம் தேசிய கட்சிகளில் பா.ஜ.க அதிக அளவு நன்கொடை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. பா.ஜ.கவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாகவே ரூ.276.45 கோடி கிடைத்துள்ளது.

பா.ஜ.க பெற்றுள்ள நன்கொடை, காங்கிரஸ் கட்சியை காட்டிலும் சுமார் 5 மடங்கு அதிகமாகும். இந்த கால அளவில் மற்ற தேசிய கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு 139 கோடி ரூபாயும், டி.ஆர்.எஸ் கட்சிக்கு ரூ.130 கோடியும், சிவசேனாவுக்கு ரூ.111 கோடி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு ரூ.92 கோடியும் நன்கொடையாக கிடைத்துள்ளன.

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 59 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 8 கோடி ரூபாயும், சி.பி.எம் கட்சிக்கு 19.6 கோடி ரூபாயும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1.9 கோடி ரூபாயும் நன்கொடை கிடைத்திருப்பதாக அந்தந்தக் கட்சிகள் தாக்கல் செய்துள்ள கணக்குகள் மூலம் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories