இந்தியா

5 நிமிடம் ஆக்சிஜன் நிறுத்தம்.. 22 கொரோனா நோயாளிகள் பலி? : மருத்துவமனை உரிமையாளரின் கொடூரச் செயல்!

உத்தரபிரதேச மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் இறப்பு குறித்து உரிமையாளர் பேசும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 நிமிடம் ஆக்சிஜன் நிறுத்தம்.. 22 கொரோனா நோயாளிகள் பலி? :  மருத்துவமனை உரிமையாளரின் கொடூரச் செயல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடு முழுவதும் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேச போன்ற மாநிலங்களில் ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக இருந்தது.

அப்போது, ஆக்ராவில் செயல்படும் பாராஸ் என்ற தனியார் மருத்துவமனையில் ஏப்ரல் 26ம் தேதி ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்தனர். அப்போது மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இந்த உயிரிழப்பு நடத்தது என எல்லோரும் நினைத்திருந்தனர்.

இந்நிலையில், இம்மருத்துவமனையின் உரிமையாளர் கொரோனா நோயாளிகள் இறப்பு குறித்துப் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி நாடுமுழுவதும் பெரும் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மருத்துவனையில் உரிமையாளரின் வீடியோவில் பேசுகையில், “ஏப்ரல் மூன்றாம் வாரத்தில், எங்கள் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அதிக எண்ணிக்கையில் சேர்ந்து கொண்டிருந்தனர். இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.

இது குறித்து நாங்கள் நோயளிகளின் உறவினர்களிடம் கூறி வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என அறிவுறுத்தினோம். ஆனால், அவர்கள் யாரும் வேறு மருத்துவமனைக்கு செல்ல மருத்துவிட்டனர்.

இதனால், நாங்கள் இருக்கும் ஆக்சிஜ வைத்து எத்தனை பேரை காப்பாற்ற முடியும் என்பதை அறிந்து கொள்வதற்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு விநியோகிப்பட்ட ஆக்சிஜனை ஏப்ரல் 26ம் தேதி 5 நிமிடம் நிறுத்தினோம்.

அப்போது 22 பேருக்கு மூக்சு திணறல் ஏற்பட்டது. அவர்களின் உடல் நீல நிறமாக மாறியது. இவர்கள் யாரும் உயிர் பிழைக்க மாட்டார்கள் என்பதை அறிந்தோம். பின்னர், 74 நோயாளிகளின் உறவினர்களை அழைத்து ஆக்சிஜன் சிலிண்டர்களை சொந்தமாக எடுத்து வரச்சொல்லி வலியுறுத்தினேன்” என பேசியுள்ளார்.

தற்போது, 22 பேரின் உயிருடன் விளையாடிய மருத்துவமனை உரிமையாளரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்த ஆக்ரா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி பாண்டே உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டரில்,, “5 நிமிடங்களில் நடத்தப்பட்ட ஆக்சிஜன் தடை ஒத்திகையால் 22 நோயாளிகள் இறந்து இருப்பது, பா.ஜ.க ஆட்சியில் மனிதநேயம் கேள்விக்குறியாகி உள்ளது. இது, கொடூர குற்றத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories