இந்தியா

பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீடு : ஏ++ மதிப்பீடு பெற்று முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு!

பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டில் தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னணியில் இருப்பதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீடு : ஏ++ மதிப்பீடு பெற்று முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா முழுவதும் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அளவிடுவதற்காகச் செயல்திறன் தரப்படுத்தல் குறியீட்டை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. இதன்படி மாநிலங்களின் பள்ளிக் கல்வி செயல்திறனை A, A+, A++ வகைப்படுத்தப்படும். கடந்த 2017-18ம் ஆண்டு முதல்முறையாக மாநிலங்களுக்கான தரவரிசை குறியீடு வெளியிட்டது.

பின்னர் ஒவ்வொரு ஆண்டும், ஒன்றிய கல்வி அமைச்சகம் சார்பில் தரவரிசை குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2019-20ம் ஆண்டுக்கான தரவரிசை குறியீட்டை, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாடு, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபார் அதிக புள்ளிகளைப் பெற்று தரவரிசைப் பட்டியலில் உயரிய இடத்தில் உள்ளதாக அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு A++ என தரக் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி, மணிப்பூர் அருணாச்சல பிரதேசம் கடந்த ஆண்டை காட்டிலும் தரவரிசை குறியீட்டில் முன்னேற்றம் கண்டுள்ளன. அதேபோல் முந்தைய ஆண்டுகளை காட்டிலும், 2019-20 ஆண்டில் பெரும்பாலான மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களது தர நிலையில் மேம்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், ஆகியவை தங்களது ஒட்டுமொத்த குறியீட்டு மதிப்பெண்ணில் கூடுதலாக 10%, அதாவது 100 அல்லது அதற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ளன.

மேலும், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் சம விகிதம் என்ற விரிவில் 10 சதவீதத்திற்கும் அதிகமான முன்னேற்றத்தை அடைந்துள்ளன. அதேபோல் ஆளுகை செயல்முறை என்ற பிரிவில் 19 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 10% வளர்ச்சியை எட்டியுள்ளன.

மாநில வாரியாக தரவரிசை குறியீட்டை பார்க்கும் போது கடந்த ஆண்டை காட்டிலும் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேம்பட்டுள்ளதை காட்டுகிறது என அமைச்சர் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories