இந்தியா

நேரலையில் தற்கொலைக்கு முயன்ற நபர்: டெல்லி போலிஸுக்கு தகவல் கொடுத்த FACE BOOK ; அதிரடியாக மீட்பு!

ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை முயன்றவரை, போலிஸாருக்கு தகவல் தொடுத்து ஃபேஸ்புக் நிறுவனம் தடுத்து நிறுத்தியுள்ளது.

நேரலையில் தற்கொலைக்கு முயன்ற நபர்: டெல்லி போலிஸுக்கு தகவல் கொடுத்த FACE BOOK ; அதிரடியாக மீட்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த அமெரிக்காவில் உள்ள ஃபேஸ்புக் நிறுவனம் உடனே டெல்லி போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, டெல்லி போலிஸார் உடனே அந்த நபர் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை வைத்து வீட்டின் முகவரியைக் கண்டுபிடித்துச் சென்றனர். அப்போது அந்த நபர் கையை அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார்.

உடனே போலிஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

அவரின் மனைவி கடந்த 2016ம் இறந்துவிட்டதால் இவர் தனியாகத் தான் வசித்து வருகிறார். இவர் ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்பது குறித்து போலிஸார் விசாரணை செய்து வருகிறனர்.

banner

Related Stories

Related Stories