இந்தியா

“தடுப்பூசி கள்ளச்சந்தையை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசு”: நீதிமன்றத்தில் கேரள அரசு பகிரங்க குற்றச்சாட்டு!

கொரோனா தடுப்பூசி கள்ளச்சந்தையை ஒன்றிய அரசு ஊக்குவிக்கிறது என கேரள அரசு விமர்சித்துள்ளது.

“தடுப்பூசி கள்ளச்சந்தையை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசு”: நீதிமன்றத்தில் கேரள அரசு பகிரங்க  குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தடுப்பூசி திட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்தாததால், தற்போது இந்தியா முழுவதுமே தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் மாநில அரசுகள் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர்களை விடுத்திருந்தாலும், இன்னும் தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து முறையான பதில்கள் வராததால், தடுப்பூசி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இப்படி ஒரு நெருக்கடியான நிலை இருக்கும் போது கூட ஒன்றிய அரசு இந்த வருடத்திற்குள் நாங்கள் அனைவருக்கும் நாங்கள் தடுப்பூசி போட்டுவிடுவோம் என பேசிவருகிறது.தடுப்பூசிகள் கையிருப்பே இல்லாதபோது எப்படி இவர்களால் இப்படி பேச முடிகிறது என அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும், மாநில அரசுகளுக்குக் கிடைக்காத தடுப்பூசிகள் தப்படி தனியாருக்குக் கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி கூட, தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்குக் கிடைக்காதபோது தனியார் கம்பெனிகளுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது ஒன்றி அரசு கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், கொரோனா தொடர்பான வழக்கு ஒன்றில், கொரோனா தடுப்பூசி கள்ளச்சந்தையை ஒன்றிய அரசு ஊக்குவிப்பதாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது.

“தடுப்பூசி கள்ளச்சந்தையை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசு”: நீதிமன்றத்தில் கேரள அரசு பகிரங்க  குற்றச்சாட்டு!

கேரள உச்சநீதிமன்றத்தில், கொரோனா தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதிகள் ஏ.முகமது முஸ்தாக், கவுசர் எப்பாகாத் அமர்வுக்கு வந்தது. அப்போது வழக்கு மீதான விவாதத்தின் போது கேரள அரசு "கொரோனா தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகள் கள்ளச்சந்தைகளில் இருந்து எளிதில் பெற்றுவிடுகின்றன. ஆனால், அரசாங்கம் தடுப்பூசி தட்டுப்பாட்டால் தவிக்கிறது." என கூறியுள்ளது.

மேலும்,தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்குக் கட்டணக் கொள்ளை நடக்கிறது. தனியார் நிறுவனங்களுடன் கைகோத்து அவற்றின் ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கத் தனியார் மருத்துவமனை ஒப்பந்தம் செய்துகொண்டு லாபம் அடைகிறது. கோவின் ஆப் மூலம் பதிவு செய்தே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையைத் தனியார் மருத்துவமனைகள் மீறுகின்றன.

கொரோனா தடுப்பூசி கள்ளச்சந்தையை ஒன்றிய அரசு ஊக்குவிக்கிறது." என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதையடுத்து இந்த வழககை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories