இந்தியா

“நடுரோட்டில் காரை வழிமறித்து மருத்துவ தம்பதி சுட்டுக்கொலை” : மனதைப் பதறவைக்கும் CCTV காட்சி !

ராஜஸ்தான் மாநிலத்தில், மருத்துவ தம்பதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“நடுரோட்டில் காரை வழிமறித்து மருத்துவ தம்பதி சுட்டுக்கொலை” : மனதைப் பதறவைக்கும் CCTV காட்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரில் மருத்துவ தம்பதியினர், காரில் சென்றபோது சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிசிடிவி காட்சியில், மருத்து தம்பதிகள் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்களை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வழிமறித்து காரை நிறுத்தச் செய்கிறார்கள்.

பின்னர், இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கிய ஒருவர் காரின் கதவருகே சென்று, கையில் வைத்திருந்த துப்பாக்கியால் மருத்துவ தம்பதியைப் பார்த்துப் பல முறை சுடுகிறார். பிறகு அதே இருசக்கர வாகனத்தில் இருவரும் அங்கிருந்து தப்பித்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவியின் காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இளம் பெண்ணையும், குழந்தையையும் கொலை செய்த வழக்கில் இந்த மருத்துவ தம்பதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடத்திருக்கும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories