இந்தியா

பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் மரண ஓலம்: கோவாவில் நான்கே நாட்களில் 74 பேர் பலியான அவலம்!

கோவா மருத்துவமனையில் நான்கு நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 74 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் மரண ஓலம்: கோவாவில் நான்கே நாட்களில் 74 பேர் பலியான அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஆக்சிஜன் பற்றாக்குறையால், உத்தர பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரகண்ட், டெல்லி, கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க ஆளும் கோவா மாநிலத்தில் நான்கு நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 74 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த செவ்வாய்கிழமையன்று ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 26 பேர் உயிரிழந்தனர். பின்னர் புதனன்று 20 பேரும், விழானன்று 15 பேரும், இன்று 13 பேரும் அடுத்தடுத்த நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், அதுவும் ஒரே மருத்துவமனையில் உயிரிழந்திருப்பது அம்மாநில மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் மரண ஓலம்: கோவாவில் நான்கே நாட்களில் 74 பேர் பலியான அவலம்!

கடந்த செவ்வாயன்று மருத்துவமனையை ஆய்வு செய்த கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும், ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக உயிரிழப்புகள் நடந்திருக்கலாம் என தெரிவித்திருந்தார்.

ஆனால், ஒரே மருத்துவமனையில் அடுத்தடுத்த நாட்கள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்திருப்பது, கோவா மாநிலத்தில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதையே காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தற்போது கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. அங்கு படுக்கைகள் இல்லாததால் வராண்டாவிலும், ஸ்டோர் ரூம்களிலும் புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories