இந்தியா

"ஆறுகளில் மிதக்கும் உடல்கள்... கண்களைத் திறந்து பாருங்கள் பிரதமரே" : ராகுல்காந்தி கடும் விமர்சனம்!

கொரோனாவால் மக்கள் படும் துயரங்களை நரேந்திர மோடி கண்களைத் திறந்து பார்க்க வேண்டும் என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

"ஆறுகளில் மிதக்கும் உடல்கள்...  கண்களைத் திறந்து பாருங்கள் பிரதமரே" : ராகுல்காந்தி கடும் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவின் இறுக்கமான பிடியில் இந்தியா சிக்கிக் கொண்டு மூச்சுவிட முடியாமல் திணறிவருகிறது. உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பத்திலிருந்தே மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு முறையாகக் கையாளவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பிரதமர் மோடி கண்களைத் திறந்து பார்க்கவேண்டும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "நதிகளில் எண்ணெற்ற உடல்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. மருத்துவமனைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

மக்களின் வாழ்க்கை பாதுகாப்புக்கான உரிமை பறிக்கப்படுகிறது. பிரதமர் மோடி தனது இளஞ்சிவப்பு நிற கண்ணாடியை கழற்றிவைத்து பார்த்தால் தான் சென்ட்ரல் விஸ்டாவைத் தவிர மற்ற காட்சிகளும் கண்களுக்குத் தெரியும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories