இந்தியா

தடுப்பூசி விலை 6 மடங்கு உயர்வு : தனியார் லாபம் பார்க்க மக்களைக் காவு கொடுக்கும் மோடி அரசு!

நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியின் விலை 6 மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

தடுப்பூசி விலை 6 மடங்கு உயர்வு : தனியார் லாபம் பார்க்க மக்களைக் காவு கொடுக்கும் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் கொரோனா பிடியில் இருந்து மக்கள் சிக்கித் தவித்து வருகின்ற சூழலில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் தடுப்பூசி பணிகள் தீவிரப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இந்தியாவில், கோவிஷீல்டு, கோவாக்சின் என்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க இன்னம் சில வருடங்கள் ஆகும் என விஞ்ஞானிகள், மருத்துவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் 150 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்து தடுப்பூசியை வாங்கியதுள்ளது மத்திய பா.ஜ.க அரசு. அதேபோல் கூடுதல் விலை கொடுத்து மாநிலங்கள் கொள்முதல் செய்யக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. மேலும் அதிகபடியான தடுப்பூசிகளை மத்திய பா.ஜ.க அரசு கொள்முதல் செய்யாததால் தற்போது நாடு முழுவதுமே தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசிக்குத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு சில தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசியின் விலையை 6 மடங்கு உயர்த்தியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

தடுப்பூசி விலை 6 மடங்கு உயர்வு : தனியார் லாபம் பார்க்க மக்களைக் காவு கொடுக்கும் மோடி அரசு!

குறிப்பாக, பூனேவில் சீரம் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கோவிஷீல்டு தடுப்பூசி தற்போது தனியார் மருத்துவமனைகளில் 700 ரூபாயிலிருந்து 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஐதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவாக்சின் தடுப்பூசி 1,250 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால், மக்கள் வீதி வீதியாக ஆக்சிஜன் வாங்க அலைந்துகொண்டிருக்கும் நேரத்தில், தடுப்பூசிகளின் விலையும் உயர்ந்திருப்பது மக்களை இன்னும் வேதனையடைய செய்துள்ளது. நாடு முழுவதுமே இலசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் விலை உயர்த்தப்பட்டிருப்பதை பா.ஜ.க அரசு வேடிக்கை பார்ப்பதோடு இல்லாமல், தனியார் மருத்துவமனைகளில் லாபத்தை உயர்த்துவதற்கு சாதகமாக இருந்து வருவதாக அரசியல் விமர்சகர்களும், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories