இந்தியா

ஒரே மருத்துவமனையில் 80 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று... டெல்லியில் தொடரும் சோகம்!

டெல்லியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் 80 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே மருத்துவமனையில் 80 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று... டெல்லியில் தொடரும் சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் இந்தியா சிக்கித் திணறி வருகிறது. தினந்தோறும் கொரோனா தொற்று எண்ணிக்கை 4 லட்சத்துக்கு மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்தும் பதிவாகிவருகிறது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து, தங்களின் உயிரையும், குடும்பத்தையும் பற்றி கவலைப்படாமல், கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் முதல் நபராக இருந்து பணியாற்றி வருகிறார்கள் மருத்துவர்கள்.

மருத்துவர்கள் என்னதான் பாதுகாப்பு உடைகள் அணிந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை பார்த்தாலும், அதிகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதிலிருந்து இதுவரை 800க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர்.

தற்போது இரண்டாவது கொரோனா அலையில் மருத்துவர்களுக்கு பணிச்சுமையும், தொற்று பாதிப்பு அதிகரித்தே உள்ளது. டெல்லியில் உள்ள சரோஜ் மருத்துவமனையில் இதுவரை 80 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் உள்ள சரோஜ் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80 மருத்துவர்களில்,12 பேர் மருத்துவமனையிலும், மற்றவர்கள் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகிறனர். மேலும் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் ஏ.கே.ராவத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இப்படி நாடுமுழுவதும் மருத்துவர்கள் தொடர்ந்து தொற்றால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்தே வருவதால் கூடுதலாக இளம் மருத்துவர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என மருத்துவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

banner

Related Stories

Related Stories