இந்தியா

ஆக்சிஜன் வசதியுடன் மினி ஆம்புலன்ஸாக மாறிய ஆட்டோ; டெல்லியில் அசத்தும் ஆட்டோ ஓட்டுநர்கள்!

டெல்லியில் ஆட்டோக்கள் சில மினி ஆம்பூலன்ஸ்களாக மாற்றப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு உதவி வருகிறது.

ஆக்சிஜன் வசதியுடன் மினி ஆம்புலன்ஸாக மாறிய ஆட்டோ; டெல்லியில் அசத்தும் ஆட்டோ ஓட்டுநர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 4,01,078 பேருக்குப் புதிதாகத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், டெல்லி, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேமாக பரவி வருவதால், இம்மாநிலங்களில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக டெல்லியில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நோயாளிகளுக்கான படுக்கை வசதியும், ஆக்சிஜனுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்து, ஆட்டோவையே ஆம்புலன்ஸாக மாற்றி இலவசமாக நோயாளிகளுக்கு உதவி வருவது மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்த ஆட்டோக்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், சானிடைசர்கள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் பி.பி.இ கிட் அணிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கையுடன் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.

ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்த ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் கூறுகையில், இந்த நெருக்கடியான நேரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சேவை மிகவும் பாராட்டத்தக்கது. டெல்லிக்கு ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் ஆலை, ஆக்சிஜன் செறிவுகளுக்கு யார் உதவ முடியுமோ அவர்கள் முன் வர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories