இந்தியா

உயிரோடு இருப்பவர் வன்முறையில் பலியானதாக பொய் பரப்பிய பா.ஜ.க... சம்பந்தப்பட்டவரின் ட்வீட்டால் அதிர்ச்சி!

மேற்குவங்கத்தில் உயிரோடு இருப்பவரை வன்முறையில் இறந்துவிட்டதாக பா.ஜ.க புகைப்படம் வெளியிட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரோடு இருப்பவர் வன்முறையில் பலியானதாக பொய் பரப்பிய பா.ஜ.க... சம்பந்தப்பட்டவரின் ட்வீட்டால் அதிர்ச்சி!
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்குவங்க மாநிலத்தில் எட்டு கட்டமாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2019 இடங்களில் பெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக, தேர்தல் முடிவுகள் வெளிவந்ததிலிருந்தே மேற்கு வங்க மாநிலத்தில் தொடர் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பா.ஜ.க மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடர் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால், வன்முறைகளை முதல்வர் மம்தா பானர்ஜி கட்டுப்படுத்த வேண்டும் என மேற்குவங்க ஆளுநர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பா.ஜ.கவினரை குறிவைத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குவதாக பா.ஜ.க ககுற்றச்சாட்டை எழுப்பி வருகிறது. இது தொடர்பாக மே 5ம் தேதி மேற்கு வங்க பா.ஜ.க செய்திளார் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, வன்முறையால் பா.ஜ.கவினர் உயிரிழந்தது குறித்து புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

இதில் ஒரு புகைப்படத்தில் மணிக் மொய்த்ரா என்பவர் சிதால்குச்சியில் நடைபெற்ற வன்முறையில் இறந்துவிட்டதாக வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் ஆங்கில ஊடகத்தில் செய்தியாளராக இருப்பதும், அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்றும் தகவல் வெளியானதால் மேற்கு வங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த செய்தியாளர் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "நான் அப்ரோ பானர்ஜி, சிதால்குச்சியிலிருந்து 1300 கிமீ தொலைவில் நான் மிகவும் ஆரோக்கியமாக உயிருடன் இருந்து வருகிறேன். பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு என்னை மணிக் மொய்த்ரா என்று குறிப்பிட்டு சிதால்குச்சியில் கொல்லப்பட்டதாகக் காட்டியுள்ளனர். தயவுசெய்து இந்தப் போலியான பதிவை நம்ப வேண்டாம். யாரும் கவலைப்பட வேண்டாம். நான் மீண்டும் கூறுகிறேன், நான் உயிருடன் தான் இருக்கிறேன்" என்று பதிவிட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணில் படுபவர்கள் படங்களை எல்லாம் போட்டு பா.ஜ.க தொடர்ச்சியாக இப்படி பொய் பிரச்சாரங்களைச் செய்து வருகிறது. மேற்கு வங்க தேர்தலுக்கு முன்பு கூட மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பயனடைந்தவர் என ஒரு பெண்ணின் படத்தை வெளியிட்டது. ஆனால், அப்பெண்மணிக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை என்றும், இப்படி ஒரு படம் வெளிவந்துள்ளதே தனக்குத் தெரியாது என்றும் அந்தப் பெண் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories