இந்தியா

சுகாதார கட்டமைப்பில் தோல்வியடைந்த மத்திய பிரதேசம் : மரத்தடியில் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் அவலம்!

மத்திய பிரதேசத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மரத்தடியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுகாதார கட்டமைப்பில் தோல்வியடைந்த மத்திய பிரதேசம் : மரத்தடியில்  நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி இந்தியாவையே உலுக்கி வருகிறது. தினந்தோறும் 4 லட்சத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு பதிவாகி வருவதால் மத்திய மோடி அரசு திணறி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,12,262 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 3,980 பேர் கொரோனா தொற்றால் புதிதாக உயிரிழந்துள்ளனர் . மேலும் மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், குஜராத், கேரளா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

குறிப்பாக, பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 25ம் தேதியிலிருந்து மே 4ம் தேதி வரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலத்தில் சுகாதார கட்டமைப்பு சரியாக இல்லாததால் கொரோனா நோயாளிகள் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாள்தோறும் உயிரிழப்புகளும் அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில், அகர் மால்வா மாவட்டம், தனியாகாதி கிராமத்தில் கொரோனா நோயாளிகளுக்கு எந்தவித பாதுகாப்பு வசதியும் இன்றி மரத்தடியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அச்சமடைந்த கிராம மக்கள், மருத்துவமனைகளுக்குச் சென்று கொரோனா சிகிச்சை மேற்கொள்ளாமல், தனியாகாதி கிராமத்தில் உள்ள ஆரஞ்சு பண்ணை தொட்டத்தில் கொரோனா சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உரிய முறையில் பயிற்சி பெறாத மருத்துவர்கள் தான் இவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

எந்தவித அடிப்படை மருத்துவ வசதிகளும் இல்லாமல் கொரோனா நோயாளிகள் மரத்தடியில் படுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு ஏற்றப்படும் ட்ரிப்ஸ் மரத்தில் கட்டி தொங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து உள்ளூர் செய்தியாளர் ஒருவர், அவர்களிடம் கேட்டபோது, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் செல்ல பயப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories