இந்தியா

ஊரடங்கு அறிவித்தும் மிரட்டும் கொரோனா; ஸ்தம்பித்து நிற்கும் மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்கள்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவித்தும் மிரட்டும் கொரோனா;  ஸ்தம்பித்து நிற்கும் மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி இந்தியாவையே உலுக்கி வருகிறது. தினந்தோறும் 4 லட்சத்திற்கு மேல் கொரோனா பாதிப்பு பதிவாகி வருவதால் மத்திய மோடி அரசு என்னசெய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,12,262 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,10,77,410 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 3,980 பேர் கொரோனா தொற்றால் புதிதாக உயிரிழந்துள்ளனர் .

மேலும் மகாராஷ்டிரா, டெல்லி, உத்திர பிரதேச மாநிலங்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தொற்று எண்ணிக்கை அதிகரித்தே செல்வதால் இந்த மாநிலங்களில் முழுமையாகச் சுகாதார கட்டமைப்பு ஸ்தம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மாநிலங்களில் ஆக்சிஜனுக்கும், படுக்கை வசதிக்கும், மருந்துக்கும் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவித்தும் மிரட்டும் கொரோனா;  ஸ்தம்பித்து நிற்கும் மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 57,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 920 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் கர்நாடக மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 50 ஆயிரத்தை கொரோனா தொற்று கடந்துள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 23,106 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமலிலிருந்தபோதும், கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராமல் அதிகரித்தே வருவதால் எடியூரப்பா அரசு அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் விழி பிதுங்கி போயுள்ளது.

banner

Related Stories

Related Stories