தமிழ்நாடு

கரூர் துயரம் : நாளை விஜய்யிடம் 2 ஆம் கட்ட விசாரணை நடத்தும் சி.பி.ஐ!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் மீண்டும் நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் விஜய்-க்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பி உள்ளது.

கரூர் துயரம் : நாளை விஜய்யிடம் 2 ஆம் கட்ட விசாரணை நடத்தும் சி.பி.ஐ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. த.வெ.க. நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்டவர்களிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. சென்னை பனையூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பிரசார வாகனத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் கொண்டு சென்று ஆய்வு நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக சிபிஐ அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நடிகர் விஜய் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நாளை மீண்டும் ஆஜராகும்படி நடிகர் விஜய்க்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பி உள்ளது. அவரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

banner

Related Stories

Related Stories