இந்தியா

மோடியின் புதிய பென்ஷன் திட்டம்; கோவாவில் கவர்னராகும் சுனில் அரோரா!

கோவாவின் கவர்னர் பதவிக்கு சுனில் அரோராவின் பெயரை பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்துள்ளார்.

மோடியின் புதிய பென்ஷன் திட்டம்; கோவாவில் கவர்னராகும் சுனில் அரோரா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் தலைமை நீதிபதிகள் சிலர் தங்களின் பதவி காலத்தில் மத்திய பா.ஜ.க அரசுக்கு சாதகமாகக் நடந்து கொண்டதால், இவர்கள் தங்களின் பதவி காலம் முடிந்து ஓய்வு பெற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி இவர்களுக்கு ராஜ்ய சாபா, லோக் ஆயுக் மற்றும் கவர்னர் பதவிகளை பரிசாக கொடுத்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இந்த குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் விதமாகச் சர்ச்சையான அயோத்தி நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என மோடி, அமித்ஷாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கிய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு ராஜ்யசபா பதவி கிடைத்ததது. மேலும், பாபர் மசூதி வழங்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த எல்.கே. அத்வானி, உமாபாரதி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை இந்த வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதி சுரேந்திர குமார் யாதவுக்கு லோகயுத்தா பதவி அன்பளிப்பாக வழங்கியது பா.ஜ.க அரசு.

இந்நிலையில், தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த சுனில்அரோராவுக்கு கோவாவின் கவர்னர் பதவி கிடைத்துள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலின் போதும் சுனில் அரோராதான் தேலைமை தர்தல் அதிகாரியாக இருந்தார். அப்போதே தேர்தல் ஆணையம் பா.ஜ.கவுக்கு சாதகமாகச் செயல்பட்டு வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

மேலும் மேற்குவங்க மாநிலத்தில், தற்போது நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தலின் போதுகூட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.கவுக்கு சாதகமாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என குற்றம்சாட்டியிருந்தார். மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோது கூட இது பா.ஜ.கவுக்கு சாதகமாக அறிவிக்கப்பட்ட முடிவு என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) பொதுச் செயலாளர் திபங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில்," அயோத்தி நிலத்தை கோவில் கட்ட கொடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ராஜ்யசபா பதவி கிடைத்தது! பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளை விடுவித்த நீதிப
திக்கு உபியின் லோகயுக்தா பதவி அன்பளிப்பு! இப்போது பார்த்தால், மேற்கு வங்க தேர்லைக் கண்காணித்த தேர்தல் ஆணைய அதிகாரிக்கு கோவாவின் கவர்னர் பதவி கிடைத்திருக்கிறது! மோடியின் புதிய பென்ஷன் திட்டம்!" என கருத்து தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories