இந்தியா

"நோயாளிகளின் குடும்பத்தினர் பொய் சொல்கிறார்களா?” - உ.பி முதல்வரின் பேச்சால் ப.சிதம்பரம் கொந்தளிப்பு!

உத்தர பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்ற யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"நோயாளிகளின் குடும்பத்தினர் பொய் சொல்கிறார்களா?” - உ.பி முதல்வரின் பேச்சால் ப.சிதம்பரம் கொந்தளிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா அதிக பாதிப்பையும், அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது துளியும் இல்லை என்றும், மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனைகள் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக தவறாக கூறுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உ.பி முதல்வர் யோகி ஆகித்யநாத் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்துகளை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் எம்.பி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், “ஆக்சிஜன், தடுப்பு மருந்துகள் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகிறார். உத்தர பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்ற யோகி ஆதித்யநாத்தின் கருத்து அருவருப்பாக உள்ளது.

எனில், அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் போலி காட்சிகளை ஒளிபரப்புகின்றனவா? செய்திகள் அனைத்தும் தவறானவையா? மருத்துவர்கள் அனைவரும் பொய் சொல்கிறார்களா?

இதுகுறித்து வெளியான வீடியோக்கள், படங்கள் போலியானதா? நோயாளிகளின் குடும்பத்தினர் பொய் சொல்கின்றனரா? இந்திய மக்கள் அனைவரையும் முட்டாள்களாகக் கருதும் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories