இந்தியா

“மருத்துவமனை கட்டிலில் சங்கிலியால் கட்டப்பட்டுள்ள பத்திரிகையாளர்” - உ.பி போலிஸாரின் மனித உரிமை மீறல்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளரை உ.பி போலிஸார் மிருகத்தைப் போல நடத்தும் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மருத்துவமனை கட்டிலில் சங்கிலியால் கட்டப்பட்டுள்ள பத்திரிகையாளர்” - உ.பி போலிஸாரின் மனித உரிமை மீறல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்துப் பதிவு செய்வதற்காக அங்கு சென்றார் கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பன். இதன் காரணமாக பா.ஜ.க உத்தரவின் பேரில் உ.பி காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சித்திக் காப்பான் சிறை குளியலறையில் வழுக்கி விழுந்ததாகவும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஏப்ரல் 21-ம் தேதி மதுரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சித்திக் காப்பானின் மனைவி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், உ.பி. காவல்துறையினர் சித்திக் காப்பானை கடும் சித்திரவதைக்குள்ளாக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், தனது கணவரை மருத்துவமனைக் கட்டிலில் ஒரு மிருகத்தைப் போல் கட்டி வைத்துள்ளதாகவும் இதனால் சித்திக் கடந்த 4 நாட்களாக உணவருந்தவோ கழிப்பறைக்குச் செல்லவோ இயலாத நிலையில் உள்ளதாகவும் பாட்டிலிலேயே சிறுநீர் கழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டுச் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எடுக்கவில்லை என்றால் சித்திக் உயிரிழக்கக்கூடும் என அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளரை உ.பி போலிஸார் மிருகத்தைப் போல நடத்தும் செய்தி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories