இந்தியா

அதிகரித்த ஆக்சிஜன் நிறுவன பங்குகள் விற்பனை: கொரோனா காலத்திலும் லாபம் பார்க்கத் துடிக்கும் கார்ப்பரேட்கள்!

பங்குச்சந்தையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிகரித்த ஆக்சிஜன் நிறுவன பங்குகள் விற்பனை: கொரோனா காலத்திலும் லாபம் பார்க்கத் துடிக்கும் கார்ப்பரேட்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடுமுழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். அதேவேளையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் தவித்து வருவதாக நாள்தோறும் செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பங்குகளும் முன்னேறி வருகிறது. குறிப்பாக மும்பை பங்குச் சந்தையில் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் 5 நிறுவனங்கள் பங்குகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் இந்த நிறுவனங்களின் பங்குகள் மீது முதலீட்டாளர்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்த நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை குவித்து வருகிறது.

அதிகரித்த ஆக்சிஜன் நிறுவன பங்குகள் விற்பனை: கொரோனா காலத்திலும் லாபம் பார்க்கத் துடிக்கும் கார்ப்பரேட்கள்!

அதன்படி, கடந்த ஒருமாதத்தில் மட்டும், நேஷனல் ஆக்சிஜன் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 42 சதவீதம் அதிகரித்து 62 ரூபாய்க்கும், லின்டே இந்தியா 9 சதவீதம் அதிகரித்து 1,896 ரூபாய்க்கும் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 11 மாதத்தில் 500 ரூபாய் அளவீட்டில் இருந்து தற்போது 1,896 ரூபாய்க்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

நாடுமுழுவதும் ஆக்சிஸ்ஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ள சூழலில் தனியார் ஆக்சிஜன் நிறுவனங்கள் தங்களின் லாப வெறிக்காக அதிக லாபத்திற்கு ஆக்சிஜனை விற்பனை செய்து வருகின்றனர். இதனை ஒழுங்கப்பட்டுத்த வேண்டிய மத்திய மோடி அரசு கைக் கட்டி வேடிக்கை பார்க்கிறது.

அதுமட்டுமல்லாது, சுகாதாரக்கட்டமையில் வலுவாக உள்ள தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை அனுமதியில்லாமல் பிற மாநிலங்களுக்கு அனுப்பும் வேளையை தற்போது மோடி அரசு செய்து வருகிறது. இதில், தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் சென்னை ஸ்ரீபெரும்புத்தூரில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில், 45,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க தன்னிச்சையான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

அதிகரித்த ஆக்சிஜன் நிறுவன பங்குகள் விற்பனை: கொரோனா காலத்திலும் லாபம் பார்க்கத் துடிக்கும் கார்ப்பரேட்கள்!

ஆக்சிஜன் தட்டுப்பாடு கைமீறிப்போன இந்த சூழலில்தான், ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கும் பணிக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. ஆலைக் கட்டுமான பணிக்கு ஒப்பந்தமே இப்போதுதான் கையெழுத்து ஆனது என்றால், ஆக்சிஜன் ஆலை எப்போது கட்டிமுடிக்கப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மத்தியில் அரசின் இந்த தாமதமான நடவடிக்கைகள், ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சாதமாக எடுக்கப்பட்டதாகவும் சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்னதாக இந்தியாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடர், பெருந்தோற்றுக் காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளும், கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துகள் மட்டுமே அதிகளவில் உயர்ந்துள்ளது. இது கடந்த காலங்களில் வெளியான புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களும், அதற்கு சாதமாக செயல்படும் மோடி அரசும் பெருந்தொற்று போன்ற இயற்கை பேரிடர்களை லாபம் சம்பாதிக்கும் வாய்ப்பாக பார்பதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories