இந்தியா

அதிகரிக்கும் Pharma நிறுவனங்களின் பங்குகள் : இலவச தடுப்பூசிக்கு இனி சாத்தியமில்லை!

பங்கு சந்தையில் மருத்துவ நிறுவனத்தின் பங்குகள் அதிகம் விற்பனையாகும் சூழல் உருவாகியுள்ளது.

அதிகரிக்கும் Pharma நிறுவனங்களின் பங்குகள் : இலவச தடுப்பூசிக்கு இனி சாத்தியமில்லை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடுமுழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். அதேவேளையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் தவித்து வருவதாக நாள்தோறும் செய்திகள் வெளியாகி வருகிறது.

அதேவேளையில், நாடுமுழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக அதிரித்து வருகிறது. இந்நிலையில் மே 1ம் தேதியில் இருந்து 18வயதிற்கு மேற்பட்டோரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்தியில் அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனால் நாடுமுழுவதுமே தடுப்பூசி தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசியை தரவேண்டிய மத்திய அரசு, மாநிலங்களே நேரடியாக கொள்முதல் செய்யவும், வெளிச்சந்தையில் தடுப்பூசிகளை விற்கவும் அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக 3 வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் படி, முதல் 30 கோடி பேருக்கு மட்டுமே மத்திய அரசு இலவசமாக வழங்கும். அதன்பின்னர் மத்திய அரசின் 50 சதவீத ஒதுக்கீட்டில் மாநில அரசுகள் பெறும் தடுப்பூசிக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

அதிகரிக்கும் Pharma நிறுவனங்களின் பங்குகள் : இலவச தடுப்பூசிக்கு இனி சாத்தியமில்லை!

இப்படி, தடுப்பூசிக்கு மாநில அரசுகள் மானியம் அளிக்க முன்வராவிட்டால், அந்த சுமையை மக்கள் தலையில் வைக்கவே இந்த ஆட்சியாளர்கள் முடிவு செய்வார்கள். தற்போது, வரிகளை தவிர்த்து கோவிஷீல்டு ஒரு டோஸ் 150 ரூபாய்க்கும், கோவாக்சின் ஒரு டோஸ் 206 ரூபாய்க்கும் மத்திய அரசு வாங்கி வந்தது.

இதில் ஒரளவே லாபம் கிடைத்ததாக மத்திய அரசிடம், தடுப்பூசி நிறுவனங்கள் புலம்பியதையடுத்து, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தடுப்பூசி விற்பனை தாராளமயமாக்கப்பட்டுள்ளது மத்திய மோடி அரசு. இதன் விளைவாக, ஒரு டோஸ் தடுப்பூசி 1000 ரூபாய் வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு டோஸ் தடுப்பூசி 1000 ரூபாய் என்றால், ஏழை மக்களுக்கு கொரோனா தடுப்பூசி எட்டா கனியாகும். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த ஒரே தீர்வு தடுப்பூசிதான் என மருத்துவ வல்லுநர்கள், விஞ்ஞானிகள் தெரிவித்து வரும் நிலையில், பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து தங்களுடைய மக்களுக்கு இலவசமாக செலுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய மோடி அரசோ, கொரோனா தடுப்பூசி விற்பனையை தாராளமயமாக்கி தடுப்பூசி விலை எகிற வைத்துள்ளது.

அதிகரிக்கும் Pharma நிறுவனங்களின் பங்குகள் : இலவச தடுப்பூசிக்கு இனி சாத்தியமில்லை!

அதுமட்டுமல்லாது, பங்கு சந்தையிலும் மருத்துவ நிறுவனத்தின் பங்குகள் அதிகம் விற்பனையாகும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, கடந்தாண்டைவிட மருந்து நிறுவன பங்குகளின்விலை குறைந்தது நாற்பது சதவீதம் அதிகரிக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்து வருகிறனர்.

அதாவது பார்மா நிஃப்டி புள்ளிகள் இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் பதினெட்டாயிரம் முதல் இருபதாயிரம் வரை ஏறுமென்று தெரிகிறது. இந்த சூழலில் மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி தருவார்கள் என்றெல்லாம் நம்பிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories