இந்தியா

கொரோனாவில் கூட அம்பானி, அதானி கொள்ளைக்கு வழிவகுத்த குஜராத் மாடல்... அம்பலமான பா.ஜ.கவின் ஊழல் பின்னணி!

குஜராத்தில் நோயாளிகளுக்கு மருந்துகள் கிடைப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. குறிப்பாக, ரெம்டெசிவீர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

கொரோனாவில் கூட அம்பானி, அதானி கொள்ளைக்கு வழிவகுத்த குஜராத் மாடல்... அம்பலமான பா.ஜ.கவின் ஊழல் பின்னணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வட மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மோசமாக கையாளுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களை அலைக்கழித்து வருகிறது.

இந்தச் சூழலில் குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நடவடிக்கை மோசமாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கொரோனா உண்மை நிலையை உணர்ந்து மக்களை காப்பாற்றுவதற்கு பதிலாக, உண்மையை மூடி மறைக்க முயல்கிறது குஜராத் பா.ஜ.க அரசு.

குறிப்பாக மருத்துவமனைகள் முன்பு நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளுடன் காத்துக்கிடக்கின்றன. படுக்கை வசதிகள் இல்லாமல், நோயாளிகள் தரையில் படுத்துக் கிடக்கும் அவல நிலையில்தான் அம்மாநில சுகாதாரக் கட்டமைப்பு உள்ளது.

கொரோனாவில் கூட அம்பானி, அதானி கொள்ளைக்கு வழிவகுத்த குஜராத் மாடல்... அம்பலமான பா.ஜ.கவின் ஊழல் பின்னணி!

இதைவிட மற்றொரு கொடுமை என்னவென்றால், மருத்துவமனையின் வெளிநோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டருடன் உள்ள கொடூரமான நிலையும் புகைப்படங்கள் வாயிலாக தெரியவருகிறது. மேலும் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் பலரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லாமலே உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தில் ‘நானோ அறிவியல்” பிரிவின் தலைவர் மற்றும் ஆராய்ச்சியாளரான இந்திரா பானர்ஜி என்பவருக்கு தொற்று பாதித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்சில் அவரை ஒவ்வொரு மருத்துவமனையாக கொண்டு சென்றனர். எங்குமே வென்ட்டிலேட்டர் கிடைக்கவில்லை. இறுதியில் ஆம்புலன்சிலேயே உயிரிழந்துள்ளார்.

அதேவேளையில், மருந்துகள் நோயாளிகளுக்கு கிடைப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. குறிப்பாக, ரெம்டெசிவீர் எனும் மருந்துக்கு குஜராத்தில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த மருந்து உண்மையிலேயே கோவிட் பெருந்தொற்றை குணப்படுத்துகிறதா என்பதில் இருவேறு கருத்துகள் உள்ளன. எனினும் மக்கள் இந்த மருந்தை நம்புகின்றனர். சுமார் ரூ.2000 விலை உள்ள இந்த மருந்து குஜராத் கள்ளச் சந்தையில் ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை விற்கப்படுகிறது.

கொரோனாவில் கூட அம்பானி, அதானி கொள்ளைக்கு வழிவகுத்த குஜராத் மாடல்... அம்பலமான பா.ஜ.கவின் ஊழல் பின்னணி!

இந்த மருந்தை மருந்துக்கடைகளில் மட்டுமே அதுவும் மருத்துவர் சீட்டு இல்லாமல் விற்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனால், குஜராத் பா.ஜ.க தலைவர் சி.ஆர்.பாட்டீல் 5,000 மருந்துகளை பா.ஜ.க அலுவலகத்தில் வைத்துக்கொண்டு தனக்கு வேண்டியவர்களுக்கு விற்று வருவதாக கூறப்படுகிறது.

இத்தகைய அவலமான குஜராத்தை தான் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் குஜராத் மாடல் எனக் கூறிவருகின்றனர். மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் கூறும் குஜராத் மாடல் பொருளாதார வளர்ச்சி என்பது முற்றிலும் கார்ப்பரேட் நலனை மட்டுமே அடிப்படையாக கொண்டது. அதிலும் குறிப்பாக அம்பானி, அதானி, கர்ஷன் பாய் பட்டேல் (நிர்மா குழுமம்), பங்கஜ் பட்டேல் (சன் ஃபார்மா) ஆகிய விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரின் பகற்கொள்ளைக்கு வழிவகுத்ததுதான் குஜராத் மாடல்!

இவர்களில் பலர் குஜராத் கலவரங்களில் மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள். சிலர் வாய்மூடி மவுனிகளாக இருந்தவர்கள். இந்த குஜராத் மாடலில் மக்கள் நலன் சார்ந்த எந்த சமூக முன்னேற்றமும் நிகழவில்லை. அதில் முக்கியமான கொடூரம் என்பது மருத்துவ கட்டமைப்புகள் என்பது அறவே புறக்கணிக்கப்பட்டன.

கோவிட் 19 முதல் அலை இதனை அம்பலப்படுத்தியது. இப்போது இரண்டாவது அலை இன்னும் கூர்மையாக இதனை அம்பலப்படுத்தியுள்ளது. மாநில மற்றும் மத்திய பா.ஜ.க அரசுகள் வேகமாகச் செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவராவிட்டால், குஜராத் மக்கள் மிகப்பெரிய துயரத்தைச் சந்திக்கும் ஆபத்து உள்ளது.

banner

Related Stories

Related Stories