இந்தியா

“நான்தான் கொரோனாவுக்கு எதிரான சக்தி” கைத்தட்டி, பாட்டு பாடி வைரஸை விரட்டிய ம.பி. பாஜக பெண் அமைச்சர்!

மத்திய பிரதேசத்தில் கொரோனாவை விரட்டுவதாகக் கூறி பெண் அமைச்சர் ஒருவர் கை தட்டி பூஜை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“நான்தான் கொரோனாவுக்கு எதிரான சக்தி” கைத்தட்டி, பாட்டு பாடி வைரஸை விரட்டிய ம.பி. பாஜக பெண் அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பைக் குறைக்க தெய்வத்தை வலியுறுத்தும் விதமாக விமானநிலையத்தில் பூஜை நடந்தது. இதில் அந்த மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் உஷா தாக்கூர்பங்கேற்றார்.

அஹில்யாபாய்ஹோல்கரின் சிலைக்கு முன் அமர்ந்து கொண்டு கை தட்டி, பாட்டுப் பாடி கொரோனாவை விரட்டிக் கொண்டிருந்தார். உஷா தாக்கூரின் இந்தச் செயல் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. மேலும் அவர் மாஸ்க் அணியாமல் பூஜை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உஷாதாக்கூர் கூறுகையில் கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி நான்தான். நான் எப்போதும் அனுமன் சாலிசாவை படித்துக் கொண்டிருக்கிறேன். நான் கடைப்பிடிக்கும் ஆன்மீக வாழ்க்கையினால் நோய் எதிர்ப்பு சக்தி எனக்கு அதிகம் உள்ளது.

“நான்தான் கொரோனாவுக்கு எதிரான சக்தி” கைத்தட்டி, பாட்டு பாடி வைரஸை விரட்டிய ம.பி. பாஜக பெண் அமைச்சர்!

மாட்டுச் சாணம் 24 மணி நேரத்திற்கு நீடித்து நிற்கும் கிருமிநாசினி ஆகும் என்றார். உஷா தாக்கூர் மாஸ்க் அணியாமல் பூஜை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்திற்கு கடந்த 24 மணிநேரத்தில் 4,986 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் 3,32,206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் 32,707 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் பலியாகி விட்டனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 4,160 என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories