இந்தியா

“பா.ஜ.கவின் கணக்கு இந்த தேர்தலுடன் முடித்துவைக்கப்படும்” - வாக்களித்த பின்னர் பினராயி விஜயன் பேச்சு!

கேரளாவில் 3.30 மணி நிலவரப்படி 58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

“பா.ஜ.கவின் கணக்கு இந்த தேர்தலுடன் முடித்துவைக்கப்படும்” - வாக்களித்த பின்னர் பினராயி விஜயன் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிக்காக வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்றுவருகிறது. வாக்குப்பதிவு துவங்கியதிலிருந்து கேரள அரசியல் கட்சித் தலைவர்களும், மக்களும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் 3.30 மணி நிலவரப்படி கேரளாவில் 58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், தர்மடோம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்த தேர்தலில் எல்.டி.எஃப் கூட்டணியின் வெற்றி ஒரு வரலாற்று வெற்றியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "உள்ளாட்சி தேர்தலில், கேரள மக்கள் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை எவ்வாறு நிராகரித்தார்களோ அதேபோல் சட்டமன்றத் தேர்தலிலும் நிராகரிப்பார்கள். எல்.டி.எஃப் கூட்டணியின் மீது மக்களுக்கு இருக்கும் உணர்ச்சியை தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் கண்டோம். இதனால் தான் நாங்கள் சொல்கிறோம் நிச்சயம் வெல்வோம்.

மேலும் பேரழிவுகளை எதிர் கொண்டபோதும், கொரோனாவை கட்டுப்படுத்தியபோதும் மக்கள் எங்களுக்கு ஆதரவாக நின்றனர். எல்லா நேரங்களிலும் எங்களுக்கு ஆதரவாக நின்றவர்கள், தங்களது கடமையை பதிவு செய்கிறார்கள். கடந்த சட்டப்பேரவை தேர்தலைவிட, இந்த சட்டப்பேரவை தேர்தலில் இடது ஐக்கிய முன்னணி அதிக தொகுதிகளில் வெல்லும். அதேபோல், நெமோமில் தொகுதியில் தொடங்கிய பா.ஜ.கவின் கணக்கு இந்தத் தேர்தலில் முடித்துவைக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories