இந்தியா

“காலி சேர்கள்... பரப்புரையை ரத்து செய்த ஜே.பி.நட்டா” - அவசர சந்திப்பு என பொய்க் காரணம் கூறிய மேலிடம்!

கூட்டம் கூடாததால் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இரண்டு பிரசாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

“காலி சேர்கள்... பரப்புரையை ரத்து செய்த ஜே.பி.நட்டா” - அவசர சந்திப்பு என பொய்க் காரணம் கூறிய மேலிடம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மேற்கு வங்கத்தில், கூட்டம் கூடாததால் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இரண்டு பிரசாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. நான்காம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மூன்று பிரச்சாரக் கூட்டங்களுக்காக பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா நேற்று கொல்கத்தா வந்திருந்தார்.

டோலிகன்சில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் ஜே.பி.நட்டா பங்கேற்றுப் பேசினார். இதையடுத்து அவர் கலந்துகொள்வதாக இருந்த செராம்பூர் மற்றும் சின்சுரூவின் நேரடிக் கூட்டங்கள் ரத்தாகின. அங்கு மக்கள் கூட்டம் சேராததே பிரசாரம் ரத்துக்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கொல்கத்தா பகுதி பா.ஜ.கவினர் கூறுகையில், “கூட்டத்தில் கலந்துகொள்ள சுமார் 7,000 பேர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 500 பேர்கூட வரவில்லை. இதனால், அங்கு நேரில் சென்று பிரச்சாரம் செய்ய நட்டா மறுத்துவிட்டார்.” எனக் கூறியுள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க மேலிடம், ஒரு அவசர சந்திப்புக்காக நட்டா டெல்லி திரும்ப வேண்டியிருந்ததால் தான் பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவசரமாகச் சென்று டெல்லியில் யாரைச் சந்தித்தார் எனும் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

banner

Related Stories

Related Stories