இந்தியா

ஒருதலைபட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம்.. பா.ஜ.க அமைச்சருக்கு விதிக்கப்பட்ட தடை 24 மணி நேரமாக குறைப்பு!

பா.ஜ.க அமைச்சருக்கு விதிக்கப்பட்டிருந்த 48 மணி நேர பிரச்சாரத் தடையை 24 மணி நேரமாக தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒருதலைபட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம்.. பா.ஜ.க அமைச்சருக்கு விதிக்கப்பட்ட தடை 24 மணி நேரமாக குறைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அசாம் மாநிலத்தில், 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே முதல், இரண்டாம் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 2ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பா.ஜ.க அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, போடோலாண்ட் மக்கள் முன்னணித் தலைவர் ஹக்ரமா மொஹிலாரி தேசிய புலனாய்வு அமைப்பு மூலம் சிறைக்கு அனுப்பப்படுவார் என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இவரது இந்தப் பேச்சு அசாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

பின்னர், பா.ஜ.க அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் பிரச்சாரம் செய்ய 48 மணி நேரம் தடை செய்வதாக நேற்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், திடீரென அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மாவுக்கு அளிக்கப்பட்ட தடையை 24 மணி நேரமாகக் குறைத்து இன்று தலைமைத் தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு அசாம் அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐந்து மாநில தேர்தல்களிலும் பா.ஜ.கவுக்கு சாதகமாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்றும், தி.மு.க எம்.பி., ஆ.ராசாவுக்கு மட்டும் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பா.ஜ.கவை சேர்ந்த அமைச்சருக்கு மட்டும் ஏன் 24 மணி நேரம் தடை குறைக்கப்பட்டது, தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதையே காட்டுகிறது என்றும் சமூக ஆர்வலர்களும், அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories