திமுக அரசு

“பேசுறது யாருன்னும் தெரியல.. காசும் கொடுக்கல”: கலைந்த மக்கள்- தமிழகம் தேடி வந்து அசிங்கப்பட்ட ஜே.பி.நட்டா

ஜே.பி.நட்டா பேசும்போது கூட்டம் சேர்ப்பதற்காக அ.தி.மு.கவினரும், பா.ஜ.கவினரும் பணம் வழங்குவதாகக் கூறி ஆட்களை வாகனங்கள் மூலம் அழைத்து வந்துள்ளனர்.

“பேசுறது யாருன்னும் தெரியல.. காசும் கொடுக்கல”: கலைந்த மக்கள்- தமிழகம் தேடி வந்து அசிங்கப்பட்ட ஜே.பி.நட்டா
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க-வின் தேசிய தலைவர்கள் பலர் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்துகொண்டிருக்கின்றனர்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை வந்தபோது, பா.ஜ.க-வினரால் அங்கு வன்முறை நிகழ்த்தப்பட்டது. மோடி வந்தபோது தி.மு.க நிர்வாகிகள் மீது வருமான வரித்துறை சோதனை ஏவப்படுகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிவகிரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஜே.பி.நட்டா பேசும்போது கூட்டம் சேர்ப்பதற்காக அ.தி.மு.கவினரும், பா.ஜ.கவினரும் பணம் வழங்குவதாகக் கூறி ஆட்களை வாகனங்கள் மூலம் அழைத்து வந்துள்ளனர். சிலருக்கு பணம் கொடுக்கும் காட்சிகளும் வெளிவந்துள்ளன.

அவ்வாறு அழைத்துவரப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு அ.தி.மு.கவினரும், பா.ஜ.கவினரும் பணம் தராததால் ஜே.பி.நட்டா பேசிக்கொண்டிருக்கும்போதே மக்கள் கொத்துக்கொத்தாக வெளியேறினர்.

கூட்டத்திற்கு வந்தால் பணம் தருவோம் எனக் கூறிவிட்டு, யாரென்றே தெரியாதவர் பேச்சைக் கேட்கவிட்டு, பணமும் தராமல் ஏமாற்றிவிட்டதாக மக்கள் புலம்பிக்கொண்டே கடும் அதிருப்தியுடன் அங்கிருந்து சென்றுள்ளனர்.

பல இடங்களிலும். அ.தி.மு.க கூட்டணிக் கட்சியினர், கூட்டத்திற்கு வர மக்களுக்கு பணம் கொடுத்து வரும் நிலையில் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories