இந்தியா

இரவில் அறிவிப்பு, காலையில் வாபஸ் : துக்ளக் தர்பாரையும் மிஞ்சி கோமாளித்தனம் செய்யும் மோடி அரசு!

சிறுசேமிப்பு கணக்குகளான வட்டி விகிதம் குறைப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், அதிருப்தியும் எழுந்ததைத் தொடர்ந்து மோடி அரசு தனது உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.

இரவில் அறிவிப்பு, காலையில் வாபஸ் : துக்ளக் தர்பாரையும் மிஞ்சி கோமாளித்தனம் செய்யும் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நடப்பு 202-22 நிதியாண்டுக்கான முதல் காலாண்டு வட்டி விகிதங்களை நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, சிறுசேமிப்பு திட்டங்களுக்கு 0.5 சதவீதம் முதல் வட்டி குறைக்கப்பட்டுள்ளது.

இது பி.பி.எப் திட்டத்தில் வட்டி விகிதம் 7. சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு பத்திரத்துக்கு வட்டி 5.9 சதவீதமாகவும் (பழைய வட்டி விகிதம் 6.8%) குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல், செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு வட்டி 6.9 சதவீதம் (7.6%) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் படிப்புச்செலவு, திருமணச் செலவு உட்பட பல்வேறு எதிர்கால செலவினங்களுக்காக சிறுசேமிப்பு திட்டங்களில்தான் மக்கள் முதலீடு செய்கின்றனர். இதுபோல், பணி ஓய்வு பெற்ற முதியவர்கள் பலரும் சிறுசேமிப்பு திட்ட வட்டியை நம்பி தங்கள் ஓய்வூதிய பலன்களை முதலீடு செய்து வைத்துள்ளனர்.

இரவில் அறிவிப்பு, காலையில் வாபஸ் : துக்ளக் தர்பாரையும் மிஞ்சி கோமாளித்தனம் செய்யும் மோடி அரசு!

இந்த சூழ்நிலையில், மத்திய அரசு தொடர்ந்து வட்டி விகிதத்தை குறைத்து வருவது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தது. இந்நிலையில், சிறுசேமிப்பு கணக்குகளான வட்டி விகிதம் குறைப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், அதிருப்தியும் எழுந்ததைத் தொடர்ந்து மோடி அரசு தனது உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், “சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. 2020 - 2021 கடைசி காலாண்டுக்கான வட்டி விகிதமே பின்பற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories