இந்தியா

“சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ?” : டி.ஆர்.பாலு MP கேள்வி!

சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், என்னென்ன நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன?

File Image
File Image
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி. ஆர். பாலு, அவர்கள், நேற்று (25 மார்ச் 2021), மக்களவையில், விமானப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன? என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர், ஹர்தீப் சிங் பூரி, அவர்களிடம், விமானப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த, மத்திய அரசால், என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன? என்றும், டெல்லி, மும்பை போன்ற பெரு நகர விமான நிலையங்களை, நவீன மயமாக்கவும், சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், என்னென்ன நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன? என்றும், வருகின்ற 2024ம் ஆண்டிற்குள்ளாக, இந்தியா மூன்றாவது பெரிய விமானச் சந்தையாக மாறும் வாய்ப்புகள் உள்ளதா? என்றும், மக்களவையில், டி. ஆர். பாலு, விரிவான கேள்வியை, எழுப்பினார்.

மத்திய விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர், அவர்கள், மக்களவையில், அளித்த பதில் பின் வருமாறு :

பசுமை சார்ந்த விமான நிலையங்களை உருவாக்கவும், உடான் திட்டத்தின் கீழ், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையில் தொடர்பு ஏற்படுத்தவும், அரசுதனியார் பங்களிப்புத் திட்டத்தின் மூலம், விமானத் துறையின் முதலீட்டை அதிகப்படுத்தவும், பொது பராமரிப்பு சேவைகளுக்கு, சரக்கு மற்றும் சேவை வரிகளை ஐந்து விழுக்காடாகக் குறைத்தும் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளை, கணிணி மயமாக்கியும், பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு, விமான போக்குவரத்து சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும், டெல்லி விமான நிலையத்தில், விமான பயணிகள் மேலாண்மையை மேம்படுத்தும் வகையில், இந்திய விமான நிலைய ஆணையத்தால், கட்டுப்பாட்டு அறைகள் இயக்கப்பட்டு வருகின்றன என்றும், விமான ஓடு பாதைகளை நவீன மயமாக்கவும், நவீ மும்பை, நொய்டாவிற்கு அருகில் ஜீவார் போன்ற இடங்களில், புதிய நவீன விமான நிலையங்களை அமைத்தும், பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றும் விரிவான பதிலை அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories