இந்தியா

“பா.ஜ.கவில் சேர்ந்து, தேர்தல்ல நில்லு; ஜாமீன் கிடைச்சிடும்” - சமூக செயற்பாட்டாளரை மிரட்டிய என்.ஐ.ஏ!

பா.ஜ.கவில் இணையச் சொல்லி என்.ஐ.ஏ அதிகாரிகள் தன்னிடம் பேரம் பேசியதாக சிறையில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர் அகில் கோகோய் குற்றம்சாட்டியுள்ளார்.

“பா.ஜ.கவில் சேர்ந்து, தேர்தல்ல நில்லு; ஜாமீன் கிடைச்சிடும்” - சமூக செயற்பாட்டாளரை மிரட்டிய என்.ஐ.ஏ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது. இதை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் தீவிரமாக இருந்தது. அதிலும் அசாம் மக்கள் மத்திய மோடி அரசை கடுமையாக எதிர்த்துப் போராடினர்.

இதனால் ஆத்திரமடைந்த மத்திய பா.ஜ.க அரசு வன்முறைகளை ஏவி போராட்டங்களை முடக்கப்பார்த்தது. மேலும் சமூக விரோதிகள் எனக் கூறி போராட்டத்தை முன்னின்று நடத்திய செயற்பாட்டாளர்களை பா.ஜ.க அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

அப்படி, அசாம் மாநிலத்தில் போராட்டத்தை முன்னின்று நடத்திய அகில் கோகோய் என்ற சமூக செயற்பாட்டாளரைக் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை செய்து அராஜகம் செய்தனர். பின்னர், அவரது டைரி, வங்கி கணக்குகள் தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றி, அவருக்குப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறது எனக் கூறி அகில் கோகோயை கைது செய்தது என்.ஐ.ஏ.

“பா.ஜ.கவில் சேர்ந்து, தேர்தல்ல நில்லு; ஜாமீன் கிடைச்சிடும்” - சமூக செயற்பாட்டாளரை மிரட்டிய என்.ஐ.ஏ!

இதையடுத்து அகில் கோகோய் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகச் சிறையிலேயே உள்ளார். இந்நிலையில், தன்னை பா.ஜ.கவில் சேரும்படி என்.ஐ.ஏ வற்புறுத்தியதாக அகில் கோகோய் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அகில் கோகோய் வெளியிட்டுள்ள அந்த கடிதத்தில், "முதலில் என்.ஐ.ஏ அதிகாரிகள் என்னை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைய வலியுறுத்தினார்கள். நான் அதற்கு மறுத்தேன். பிறகு அவர்கள் என்னை பா.ஜ.கவில் சேரச்சொன்னார்கள். மேலும், பா.ஜ.கவில் இணைந்தால் உடனடியாக உனக்கு ஜாமீன் கிடைக்கும் என்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், வரும் தேர்தலில் போட்டியிட வைத்து, வெற்றி பெறச் செய்து, அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என பா.ஜ.கவுக்காக பேரம் பேசினர். இதற்கு உடன்படவில்லை என்றால், உன்மீது போடப்பட்டுள்ள பல்வேறு பொய் வழக்குகளால் உச்சநீதிமன்றத்தில் கூட உனக்கு ஜாமீன் கிடைக்காது. 20 கோடி ரூபாய் வரை என்.ஐ.ஏ அதிகாரிகள் லஞ்சம் கொடுக்கவும் முயன்றனர்.

இவர்களின் நடவடிக்கையைப் பார்க்கும்போது, சிறையிலிருந்து வெளியேறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் நான் இழந்துவிட்டதாகத் தெரிகிறது. என் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. உடல் ரீதியாகவும் என்னை அழித்துவிட்டார்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories