இந்தியா

காவல்துறை முன்பே தலித் செயற்பாட்டாளர் கொலை... கேள்வி கேட்ட ஜிக்னேஷ் மேவானி சட்டசபையிலிருந்து இடைநீக்கம்!

குஜராத்தில் தலித் செயல்பாட்டாளர் கொலை செய்யப்பட்டது குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பிய ஜிக்னேஷ் மேவானியை, பா.ஜ.க அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

காவல்துறை முன்பே தலித் செயற்பாட்டாளர் கொலை... கேள்வி கேட்ட ஜிக்னேஷ் மேவானி சட்டசபையிலிருந்து இடைநீக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள, சனோதர் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்ராபாய் போரிச்சா. இவர் தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளராக இருந்துவந்தார். அவரது நிலத்தை அபகரிக்க முயன்ற ஆதிக்க சக்திகள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்கசக்தியினர் அவரை கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து, குஜராத் சட்டசபை கூட்டத்தில், சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, அம்ராபாய் போரிச்சாவின் உருவப்படத்தைக் காட்டி, இவரைக் கொலை செய்தவர்களை ஏன் இன்னும் பிடிக்கவில்லை. இவர் காவல்துறையின் முன்னிலையிலேயே கொலை செய்யப்பட்டிருக்கிறார் எனப் பேசினார். மேலும் ஜிக்னேஷ் மேவானி கையில் வைத்திருந்த பதாகையில், "அரசு குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறதா?" என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க அரசு அவரை உடனே சட்டசபையிலிருந்து இடைநீக்கம் செய்தது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜிக்னேஷ் மேவானி, அம்ராபாய் போரிச்சாவைக் கொலை செய்த குற்றவாளிகளை இந்த அரசு பாதுகாக்க நினைக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜிக்னேஷ் மேவானி, அம்ராபாய் போரிச்சா கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு 17 நாட்கள் ஆகியும், குற்றத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளரைக் கைது செய்யவில்லை" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories