இந்தியா

4 தலித் சிறுவர்களின் கைகளை கட்டி நடக்கவைத்து கொடுமைப்படுத்திய கிராம மக்கள்... பஞ்சாபில் கொடூர சம்பவம்!

பஞ்சாபில், நான்கு தலித் சிறுவர்களின் கைகளை கட்டி, அவர்களை 4 கிலோமீட்டர் நடக்கவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

4 தலித் சிறுவர்களின் கைகளை கட்டி நடக்கவைத்து கொடுமைப்படுத்திய கிராம மக்கள்... பஞ்சாபில் கொடூர சம்பவம்!
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஞ்சாப் மாநிலம், பாசவுர் கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள், இந்த கிராமத்தில் உள்ள ஒரு சமாதியில் 300 ரூபாய் திருடியதாகக் கூறப்படுகிறது. இந்த சிறுவர்களைப் பிடித்த பன்னோரி கிராம மக்கள், அவர்களின் இரண்டு கைகளையும் சேர்த்து முதுகுக்குப் பின்புறமாகக் கட்டி 4 கிலோமீட்டர் நடக்கவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பின்னர், இந்த சிறுவர்கள் குறித்து பாசவுர் கிராமத் தலைவருக்கும், பஞ்சாயத்து உறுப்பினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து இவர்கள் அந்த கிராமத்திற்குச் சென்று பார்த்தபோது, சிறுவர்களின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் சிறுவர்களைத் தாக்கியதில் ஒரு சிறுவனுக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனை வேண்டும் எனக் கோரி ஒரு சிறுவனின் தந்தை, சிறுவர் உரிமைகள் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் காவல்நிலையத்திலும் பன்னோரி கிராம மக்கள் மீது புகார் கொடுத்துள்ளார்.

தூரிசதர் காவல் நிலைய பொறுப்பாளர் தீபந்தர் பால் சிங், பாசவுர் கிராமத் தலைவர் குர்னாம் சிங் உட்பட நான்குபேர் மீது எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், தலித்துகள் மீதான தாக்குதலும், அவர்கள் மீதான வன்கொடுமைகளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories