இந்தியா

"காயம்பட்டதை அரசியலாக்க வேண்டாம்" - மேற்கு வங்கத்தில் மம்தாவிடம் கெஞ்சும் பா.ஜ.க!

மேற்கு வங்க மாநிலத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

"காயம்பட்டதை அரசியலாக்க வேண்டாம்" - மேற்கு வங்கத்தில் மம்தாவிடம் கெஞ்சும் பா.ஜ.க!
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தல் மார்ச் இறுதியில் தொடங்கி 8 கட்டங்களாக நடைபெறுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதையடுத்து சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நந்திகிராம் சென்றிருந்தார். வேட்பு மனு தாக்கல் செய்தபிறகு, நந்திகிராம் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டா.

அப்போது அவர் காரில் ஏறி சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் அவரை தள்ளிவிட்டதில் கீழே விழுந்தார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து காலில் காயம் ஏற்பட்ட நிலையிலும், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். முதல்வர் மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் சம்பவம் தற்போது மேற்குவங்க மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையடுத்து, மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும், என அம்மாநில தேர்தல் ஆணையத்திற்கு, இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

"காயம்பட்டதை அரசியலாக்க வேண்டாம்" - மேற்கு வங்கத்தில் மம்தாவிடம் கெஞ்சும் பா.ஜ.க!
Kalaignar TV

இந்த சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது மேற்குவங்கத்தில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என பா.ஜ.க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ, எம்.பி என பலரைக் குதிரை பேரம் பேசி விலைக்கு வாங்கி வருகிறது.

இதற்கிடையே பா.ஜ.கவின் மூத்த தலைவராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த யஷ்வந்த் சின்ஹா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மேலும் யஷ்வந்த் சின்ஹா மேற்கு வங்க மாநிலத்தில் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மேற்கு வங்க பா.ஜ.க தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது.

இந்நிலையில், தனது வலியைவிட மக்களின் வலி மோசமானது எனக் கூறி காலில் காயம் ஏற்பட்ட நிலையிலும் மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருவது, மேற்குவங்க மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், பயந்துபோன பா.ஜ.க, மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்டது விபத்துதான், இதை அரசியலாக்க வேண்டாம் எனக் கூறிவருகிறது. மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் பேசுபொருளாக மாறிவிட்டதால், இதை அரசியலாக்க வேண்டாம் என கூறியிருப்பது, பா.ஜ.க தோல்வி பயத்தில் இருப்பதைக் காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories