இந்தியா

'நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க தடையில்லை' : இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வங்கிக் கடன் மோசடியில், நீரவ் மோடி, சாட்சியங்களை அச்சுறுத்தியும், அழிக்கவும் முயற்சித்துள்ளார் என இங்கிலாந்த நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

'நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க தடையில்லை' : இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்து வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றார் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி. இவர் மீதான குற்றச்சாட்டு வலுவடைந்ததைத் தொடர்ந்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக சுற்றித் திரிந்தபோது, குற்றவாளியைப் பிடிக்காமல் பா.ஜ.க அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து இந்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நீரவ் மோடியை லண்டன் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

“கறுப்புப் பணத்தை ஒழிப்போம்; அதைப் பிரித்து நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் தருவோம்” எனச் சொல்லி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க ஆட்சியில் தான் விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி உள்ளிட்ட பல தொழிலதிபர்கள் இந்தியாவில் மோசடி செய்து விட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளனர் என மோடி அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

'நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க தடையில்லை' : இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

இதனைத் தொடர்ந்து, நீரவ் மோடிக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடமிருந்த விலையுயர்ந்த பொருட்களையும் இந்தியாவிற்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்காகச் சட்ட ரீதியிலான முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான வழக்கு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சாமுவேல் கூஸ் இன்று பரபரப்பு தீர்ப்பு ஒன்று வழங்கியுள்ளார். அவர் வழங்கிய இந்த தீர்ப்பில்,“நீரவ் மோடி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் நீதி கிடைக்காது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீரவ் மோடியை இந்தியாவுக்கு ஒப்படைத்து மனித உரிமைகளுக்கு இணங்குவதில் திருப்தி அடைகிறேன், இது இந்தியாவில் நடைபெறும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய வழக்கு.

'நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க தடையில்லை' : இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

நீரவ் மோடி நியாயமான முறையில் வியாபாரத்தை நடத்தினார் என்பதை நான் ஏற்கவில்லை. இந்த வழக்கில் நீரவ் மோடி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது. அதே போல சாட்சியங்களை அழிக்கவும், சாட்சிகளை அச்சுறுத்தவும் நீரவ் மோடி சதி செய்திருக்கிறார்” எனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நீரவ் மோடியை இந்தியாவிற்கு அழைத்து வந்து, அவர் மீதான மோசடி வழக்கை நேர்மையான முறையில் விசாரணை நடத்தி, அவருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories