இந்தியா

“தேர்தலுக்கு முன்கூட்டியே துணை ராணுவம் குவிப்பு? - சட்ட விதிகளை மீறும் மோடி அரசு” : ‘தினகரன்’ தலையங்கம் !

தேர்தல் நடக்கும் தேதியே இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் முன்கூட்டியே துணை ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது ஏன் என ‘தினகரன்’ நாளிதழ் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

“தேர்தலுக்கு முன்கூட்டியே துணை ராணுவம் குவிப்பு? - சட்ட விதிகளை மீறும் மோடி அரசு” : ‘தினகரன்’ தலையங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேர்தல் நடக்கும் தேதியே இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் முன்கூட்டியே துணை ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது ஏன் என்ற கேள்வியை எழும்பியுள்ளதுஎன்று ‘தினகரன்’ நாளிதழ் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து தினகரன் நேற்று ‘தெளிவுபடுத்துமா ஆணையம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள தலையங்கம் வருமாறு :-

சட்ட விதிகளை தங்கள் வசதிக்கேற்ப வளைப்பதும், மரபுகளை மீறுவதும் மோடி அரசுக்கு கை வந்த கலை. அதுவும் தேர்தல் நேரம் வந்துவிட்டால் அவர்களது அதிகாரம் கொடி கட்டி பறக்கும். எதை செய்தாவது தங்கள் கட்சியையோ, தங்கள் கைப்பாவையையோ ஆட்சி கட்டிலில் அமர்த்த எல்லா தில்லாலங்கடி வேலைகளையும் தேர்தலுக்கு முன்பும், தேர்தலின்போதும், முடிவு வெளியான பிறகும் பா.ஜ.க செய்யும். நடக்க உள்ள 5 மாநில தேர்தலில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறது பா.ஜ.க.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய இந்த ஐந்து மாநிலங்களில் அசாமில் மட்டுமே பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ளது. தமிழகத்தில் அவர்களது சொல்பேச்சு கேட்டு நடக்கும் அ.தி.மு.க ஆட்சி உள்ளது. மேற்கு வங்காளத்திலோ மம்தா பானர்ஜி பா.ஜ.க. கடும் போட்டி கொடுக்கிறார். கேரளாவில் மார்ச்சிஸ்ட் ஆட்சியும், புதுச்சேரியில் காங்கிரஸ் அரசும் உள்ளன.

“தேர்தலுக்கு முன்கூட்டியே துணை ராணுவம் குவிப்பு? - சட்ட விதிகளை மீறும் மோடி அரசு” : ‘தினகரன்’ தலையங்கம் !

இந்த தேர்தலில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக உள்ளது. இதற்காக புதுசேரியில் அடுத்தடுத்து எம்.எல்.ஏ-க்களை காங்கிரசில் இருந்து இழுத்து நாராயணசாமி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கின்றனர். மேற்கு வங்கத்திலோ திரிணாமுல் காங்கிரசில் இருந்து முக்கிய தலைவர்களை ஒட்டு மொத்தமாக தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர். தமிழகம், கேரளாவிலும் காலூன்ற பா.ஜ.க காய் நகர்த்தி வருகிறது.

மேற்கு வங்காளம், கேரளாவில் அண்மை காலங்களில் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் நடப்பதாக காரணம் காட்டி அங்கு மத்திய படைகளை உடனே குவிக்க வேண்டும் என்று பா.ஜ.க கடந்த வாரம் தான் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு வரும் 25ம் தேதி முதல் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்துக்கு 45 கம்பெனி துணை ராணுவத்தினர் வருகிறார்கள். கேரளாவுக்கு 30 கம்பெனியும், மேற்கு வங்காளத்துக்கு 125 கம்பெனி வீரர்களும் வர உள்ளனர்.

வழக்கமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவுக்கு ஒரு சில நாட்கள் இருக்கும் நிலையில்தான் மத்திய துணை ராணுவ படையினர் தேர்தல் நடக்கும் மாநிலத்துக்கே வருவார்கள். கொடி அணிவகுப்பு நடத்துவார்கள். வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். ஆனால், இந்த முறை தேர்தல் நடக்கும் தேதியே இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் முன்கூட்டியே துணை ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது ஏன் என்ற கேள்வியை எழும்பியுள்ளது.

“தேர்தலுக்கு முன்கூட்டியே துணை ராணுவம் குவிப்பு? - சட்ட விதிகளை மீறும் மோடி அரசு” : ‘தினகரன்’ தலையங்கம் !

மேற்கு வங்காளம், கேரளாவில் வன்முறைகள் நடப்பதாக ஒரு வாதத்துக்காக வைத்துக்கொண்டால் கூட தமிழகத்தில் தற்போது பெரிய அளவில் மோதல்கள் இல்லாத நிலையில், இங்கு மத்திய படைகள் குவிக்கப்படுவது அரசியல் கட்சிகளிடையே ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊழல் பணத்தை அள்ளி வீசி ஓட்டுக்களை பெற அ.தி.மு.க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், முன்கூட்டியே துணை ராணுவம் குவிக்கப்பட்டு, அவர்கள் துணையோடு எல்லா விதமான தில்லுமுல்லுகளும் அரங்கேறுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது. இந்த விவகாரத்தில் தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.

banner

Related Stories

Related Stories