இந்தியா

100ஐ தொட்ட பெட்ரோல் விலை : சாமானியர்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு - ஆதரவு கொடுக்கும் வலதுசாரிகள்

மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 100-ஐ கடந்ததால் அம்மாநில மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

100ஐ தொட்ட பெட்ரோல் விலை : சாமானியர்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு - ஆதரவு கொடுக்கும் வலதுசாரிகள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. மேலும், ராஜஸ்தானிலும் ரூ.99.29-க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனாலும் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச எரிபொருள் விலை வீழ்ச்சியால் கிடைக்கும் லாபத்தை ஈடுசெய்யும் வகையில் கடந்த மார்ச் மாதம் வரிகளை மத்திய அரசு உயர்த்தியது.

அதைத்தொடர்ந்து தற்போது வரை பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.19.16-ம், டீசலுக்கு ரூ.16.77-ம் உயர்ந்து விட்டது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ நெருங்கி விட்டது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.88.73-க்கும், டீசல் ரூ.79.06-க்கும் விற்கப்படுகிறது. அதேநேரம் மும்பையில் பெட்ரோல் ரூ.95.21க்கும், டீசல் ரூ.86.04-க்கும் விற்பனையானது.

100ஐ தொட்ட பெட்ரோல் விலை : சாமானியர்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு - ஆதரவு கொடுக்கும் வலதுசாரிகள்

இந்நிலையில், முதல் முறையாக வரலாறு காணாத வகையில், மராட்டியத்தின் பர்பானி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விற்கப்பட்டது. டீசல் விலை ரூ.97.38 ஆக உயர்ந்துள்ளது. அதிக தொலைவில் இருந்து பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படுவதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என மாவட்ட பெட்ரோல் விற்பனையாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், பெட்ரோல்-டீசலுக்கு நாட்டிலேயே அதிக வரி விதிக்கும் ராஜஸ்தானிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கி விட்டது. அங்குள்ள ஸ்ரீகங்காநகர் டவுனில் ரூ.99.29-க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையானது. டீசல் விலையோ ரூ.91.17 ஆக உள்ளது.

தமிழ்நாட்டிலும் கூட தொடர்ந்து ஒரு வாரமாக தினந்தோறும் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.91.19 ஆகவும், டீசல் விலை ரூ.84.44 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்தியாவில், இது வரை காணாத வகையில் புதிய உச்சமாக 100-ஐ கடந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். மேலும் பெட்ரோல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்ற அச்சத்திலும் பொதுமக்கள் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories