இந்தியா

கருத்து சுதந்திரத்தின் எல்லை மீறும் பாஜக : Google CEO சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு செய்த உ.பி அரசு

கூகுள் தலைமைச் செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்து, பிறகு விடுதலை செய்துள்ளது உத்திரப்பிரதேச காவல்துறை.

கருத்து சுதந்திரத்தின் எல்லை மீறும் பாஜக : Google CEO சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு செய்த உ.பி அரசு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த பாடல், காணொலி தொடர்பாக Google நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேர் மீது கடந்த வாரம் உத்திர பிரதேச மாநிலம், வாரணாசி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறை இந்த குற்றத்தில் தொடர்பில்லை என கூறி சுந்தர் பிச்சை உள்ளிட்ட 3 கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளின் பெயர்களை வழக்கிலிருந்து விடுவித்து உள்ளது.

மேலும் வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், பாடலை உருவாக்கியதாகச் சொல்லப்படும் காசிப்பூரைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் மற்றும் பாடல் தயாரித்த உள்ளூர் இசை நிறுவனம் ஆகியோர் பெயர்களும் இந்த வழக்கில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்து சுதந்திரத்தின் எல்லை மீறும் பாஜக : Google CEO சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு செய்த உ.பி அரசு

தற்போது , விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடந்துவரும் வேளையில், இதற்கு ஆதரவாக உலகம் முழுவதும் குரல் வருவதால் ஆவேசமடைந்திருக்கும் பா.ஜ.க அரசு, கூகுள், ட்விட்டர்,பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.

மேலும், விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து, கருத்து தெரிவித்திருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் மீதும் டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories