இந்தியா

"இது மக்களின் பட்ஜெட் அல்ல... பணக்காரர்களுக்காக பணக்காரர்கள் வகுத்த பட்ஜெட்" - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்கள் வகுத்த பட்ஜெட் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"இது மக்களின் பட்ஜெட் அல்ல... பணக்காரர்களுக்காக பணக்காரர்கள் வகுத்த பட்ஜெட்" - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2021-22ம் ஆண்டு பட்ஜெட் குறித்த விவாதம் மாநிலங்களவையில் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி-கள் கடுமையாக விமர்சித்து பேசிவருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், "கொரோனாவால் 6.40 கோடி மக்கள் வேலையிழந்துவிட்டார்கள். பெண்களில் 22 சதவீதம் பேருக்கு வேலையில்லை. 2.80 கோடி மக்கள் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளன.

இந்தியாவில் தேவையின் பகுதி குறைந்து வருகிறது. வளர்ந்த மாநிலங்களான தமிழகத்திலேயே தேவையில் பற்றாக்குறை என்றால், பிற்படுத்தப்பட்ட மாநிலங்களான உத்தர பிரதேசம், பீஹார், ஒடிசாவில் கற்பனை செய்து பாருங்கள். மொத்த தேவையை புறக்கணித்துவிட்டார்கள். நீங்கள் தாக்கல் செய்த பட்ஜெட் யாருக்கானது?

முதலீட்டுச் செலவு ரூ.51 ஆயிரம் கோடி என்றால் மற்ற பணம் எங்கு சென்றது. வருவாயின் பகுதியில் அரசின் செலவு ரூ.4 லட்சம் கோடிக்கு அதிகமாக இருக்கிறது. ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக வருவாய் பற்றாக்குறை இருக்கிறது. என்னுடைய வார்த்தையைக் குறித்துக் கொள்ளுங்கள், அடுத்த ஆண்டு வருவாயிலும் பற்றாக்குறை இருக்கும்.

"இது மக்களின் பட்ஜெட் அல்ல... பணக்காரர்களுக்காக பணக்காரர்கள் வகுத்த பட்ஜெட்" - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

முதலீட்டு செலவினத்துக்கு செலவிடும்ம்தொகை போதுமானது அல்ல. நீங்கள் பெறும் பணம் என்பது இடைவெளியை நிரப்புவதற்குத்தான் போதுமானதாக இருக்கும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இயல்பில் 14.8 சதவீதமும், நிதியாண்டில் 11 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. இது மிகவும் குழப்பமாக இருக்கிறது. இந்த பட்ஜெட் என்பது பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்கள் வகுத்த பட்ஜெட். தேசத்தில் உள்ள ஏழைகளுக்காக, புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, ரேஷன் பொருட்களுக்காக காத்திருக்கும் மக்களுக்காக ஏதும் இல்லை.

இந்த நேரத்தில் நம்முடைய கடும் எதிர்ப்பை, போராட்டத்தை பதிவு செய்தாக வேண்டும். ஏனென்றால், எதிர்ப்பாளர்களான எங்களை அந்தோலன்ஜீவி என்று அழைக்கிறார்கள். மக்களின் பட்ஜெட் என நீங்கள் அழைப்பதை மறுக்கிறோம்" எனக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

banner

Related Stories

Related Stories